Homeசெய்திகள்சினிமாவிஜயின் 'சச்சின்' படத்தை தொடர்ந்து ரீ ரிலீஸ் ஆகும் அஜித்தின் சூப்பர் ஹிட் படம்!

விஜயின் ‘சச்சின்’ படத்தை தொடர்ந்து ரீ ரிலீஸ் ஆகும் அஜித்தின் சூப்பர் ஹிட் படம்!

-

- Advertisement -

சமீபகாலமாக பழைய திரைப்படங்கள் 4K தரத்தில் புதுப்பிக்கப்பட்டு மீண்டும் ரிலீஸ் செய்யப்படுவது ட்ரெண்டாகி வருகிறது.விஜயின் 'சச்சின்' படத்தை தொடர்ந்து ரீ ரிலீஸ் ஆகும் அஜித்தின் சூப்பர் ஹிட் படம்! இந்த படங்கள் இன்றைய தலைமுறையினர்களை கவர்ந்து இப்பொழுதும் வசூல் ரீதியாக வெற்றி பெற்று வருகிறது. அந்த வகையில் பெரிய ஹீரோக்களின் படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்படுவதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் விஜய் நடிப்பில் வெளியான சச்சின் திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 18-ஆம் தேதி மீண்டும் ரிலீஸ் செய்யப்பட இருக்கிறது. அதை தொடர்ந்து அஜித்தின் சூப்பர் ஹிட் படம் ஒன்று அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.விஜயின் 'சச்சின்' படத்தை தொடர்ந்து ரீ ரிலீஸ் ஆகும் அஜித்தின் சூப்பர் ஹிட் படம்!

கடந்த 2000 ஆம் ஆண்டு ராஜிவ் மேனன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக தபு நடித்திருந்தார். இவர்களுடன் இணைந்து ஐஸ்வர்யா ராய், மம்மூட்டி, அப்பாஸ் மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்த படத்தில் காதல், பாசம், பிரிவு, பொருளாதார சவால்கள் என அனைத்தும் காட்டப்பட்டிருந்தது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றி படமாக அமைந்தது.விஜயின் 'சச்சின்' படத்தை தொடர்ந்து ரீ ரிலீஸ் ஆகும் அஜித்தின் சூப்பர் ஹிட் படம்! அதேசமயம் ஏ.ஆர். ரகுமானின் இசையில் வெளியான பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இந்நிலையில் இப்படம் மே மாதம் அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு மீண்டும் திரைக்கு வரும் என தகவல் வெளியாகியுள்ளன.

ஏற்கனவே அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் நாளை (ஏப்ரல் 10) திரைக்கு வர இருக்கும் நிலையில் மே மாதம் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் திரைப்படமும் மீண்டும் திரைக்கு வர இருப்பது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை தந்துள்ளது. எனவே ரசிகர்கள் அடுத்தடுத்து கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகின்றனர்.

MUST READ