அஜித் நடிக்கும் விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
நடிகர் அஜித் துணிவு திரைப்படத்திற்கு பிறகு தனது 62 ஆவது படமான விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை மகிழ் திருமேனி இயக்கி வருகிறார்.
இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். லைக்கா நிறுவனத்தின் சார்பில் சுபாஸ்கரன் இந்த படத்தை தயாரிக்க அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். ஓம் பிரகாஷ் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏறத்தாழ இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கும் நிலையில் இன்னும் சில நாட்கள் மட்டும் படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்தது இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு திரைக்கு வர தயாராகி வருகிறது.அதன்படி நடிகர் அஜித்தும் தனது டப்பிங் பணிகளை நிறைவு செய்துள்ளார். இதற்கிடையில் இந்த படத்தில் இருந்து அடுத்தடுத்த போஸ்டர்களும் டீசரும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த படமானது பிரேக் டவுன் என்ற ஹாலிவுட் படத்தை தழுவி உருவாகி வருவதாக சொல்லப்படுகிறது. இருப்பினும் துணிவு திரைப்படம் வெளியாகி ஓராண்டுக்கு மேலாகிவிட்ட நிலையில் தல அஜித்தை திரையில் காண ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரெடியாகிவிட்டதாகவும் இந்த வார இறுதிக்குள் இந்த பாடல் வெளியாகும் எனவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே இந்த பாடலானது குத்து பாடலா? காதல் பாடலா? மோட்டிவேஷன் பாடலா? எந்த மாதிரியான பாடலாக இருக்கும் என ரசிகர்கள் இப்பொழுதே யோசிக்க தொடங்கிவிட்டனர்.