ஆகாஷ் முரளி, அதிதி சங்கர் நடிக்கும் நேசிப்பாயா படத்தின் டீசர் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
90களில் பலரின் ஃபேவரைட் ஹீரோவாக வலம் வந்த மறைந்த நடிகர் முரளியின் இளைய மகன் தான் ஆகாஷ் முரளி. இவர் தற்போது நேசிப்பாயா எனும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் ஆகாஷ் முரளிக்கு ஜோடியாக நடிகை அதிதி சங்கர் நடித்துள்ளார். ரொமான்டிக் காதல் கதை களத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தை பில்லா, ஆரம்பம் உள்ளிட்ட படங்களை இயக்கிய விஷ்ணுவரதன் இயக்கியிருக்கிறார். எக்ஸ் பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. யுவன் சங்கர் ராஜா இதற்கு இசையமைத்திருக்கிறார். கேமரான் எரிக் பிரிசன் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். நீண்ட இடைவெளிக்கு பிறகு விஷ்ணுவரதன் இயக்கியுள்ள இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. அதன்படி கடந்த சில தினங்களுக்கு முன்பாக இருந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்ததாக இந்த படம் விரைவில் திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது. இந்நிலையில் நேசிப்பாயா படத்தின் டீசர் வருகின்ற செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகும் என படக் குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.