Homeசெய்திகள்சினிமாதெலுங்கு சினிமாவில் களமிறங்கும் அக்‌ஷய் குமார்... ரசிகர்கள் உற்சாகம்...

தெலுங்கு சினிமாவில் களமிறங்கும் அக்‌ஷய் குமார்… ரசிகர்கள் உற்சாகம்…

-

தெலுங்கில் உருவாகும் கண்ணப்பா என்ற திரைப்படத்தில் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் நடிக்கிறார்.

தெலுங்கில் முகேஷ் குமார் சிங் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய திரைப்படம் கண்ணப்பா. பேண்டசி டிராமா கதைக்களத்தில் இப்படம் உருவாகிறது. இதில் நடிகர் விஷ்ணு மஞ்சு நடிக்கிறார். கண்ணப்பர் என்ற வேடத்தில் விஷ்ணு நடிக்கிறார். இந்து கடவுள் சிவனை வழிபடும் அவரது தீவிர பக்தன் கண்ணப்பரை பற்றிய கதையை தழுவி இப்படம் உருவாகிறது. இதில் பிரபல மலையாள நடிகர் மோகன்லால் மற்றும் தெலுங்கு நடிகர் பிரபாஸ் ஆகியோர் சிவனாக நடிக்கிறார். கௌரவ வேடத்தில் இருவரும் நடிக்கின்றனர்.

இந்நிலையில், இத்திரைப்படத்தில் பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வரும் அக்‌ஷய் குமாரும், இத்திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இணைந்துள்ளார். இதுவே அவர் நடிக்கும் முதல் தெலுங்கு திரைப்படமாகும். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் இந்த மாதம் தொடங்குகிறது. படத்தில் பங்கேற்பதற்காக வந்த அக்‌ஷய் குமாருக்கு படக்குழுவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்

இத்திரைப்படத்தில் பிரபாஸூம் நடிக்கிறார். சலார் படத்திற்கு பிறகு கல்கி படத்தில் நடித்து வரும் அவர், பல படங்களில் அடுத்தடுத்து கமிட்டாகி வருகிறார். இப்படத்திலும் கௌரவ வேடத்தில் நடிக்கிறார்.

MUST READ