கேப்டன் விஜயகாந்த் சினிமாவில் மட்டுமல்லாமல் நிஜ வாழ்க்கையிலும் ஹீரோவாக வாழ்ந்தவர். எந்த ஒரு உயிராக இருந்தாலும் அதை மதிக்கக் கூடியவர். தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என பலருக்கும் உதவி செய்து மனிதநேய மிக்க மாமனிதனாக இன்றைக்கும் தமிழக மக்களின் நெஞ்சங்களில் வாழ்ந்து வருகிறார். இவருடைய மறைவு தமிழகத்தையே இருளில் மூழ்க செய்தது. மேலும் கேப்டன் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு நாளான இன்று (டிசம்பர் 28) கோயம்பேட்டில் உள்ள விஜய்காந்தின் நினைவிடத்தில் ரசிகர்களும் தொண்டர்களும் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில்தான் அலங்கு படக்குழுவினர் கேப்டன் விஜயகாந்தை நினைவுக்கூரும் விதமாக ஸ்பெஷல் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
எஸ் பி சக்திவேல் இயக்கியிருந்த இந்த படத்தில் குணாநிதி, காளி வெங்கட், செம்பன் வினோத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த படத்தில் ‘பிறப்புக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற கருத்து அழுத்தமாக சொல்லப்பட்டிருக்கிறது. அதன் அடிப்படையில் தற்போது இவர்கள் வெளியிட்டிருக்கும் போஸ்டரில் எனக்கு எல்லா உசுரும் ஒன்னு தான் என்று விஜயகாந்த் சொல்வதைப் போல் என்றும் உங்கள் நினைவில் கேப்டன் என்று அவருடைய நினைவு நாளான இன்று (டிசம்பர் 28) அவரை நினைவுகூர்ந்துள்ளனர்.