Homeசெய்திகள்சினிமாவொண்டர் வுமன் நடிகை உடன் ஆலியா பாட் நடித்துள்ள ஹாலிவுட் படம்… அதிரடி ஆக்ஷன் ட்ரைலர்...

வொண்டர் வுமன் நடிகை உடன் ஆலியா பாட் நடித்துள்ள ஹாலிவுட் படம்… அதிரடி ஆக்ஷன் ட்ரைலர் வெளியானது!

-

- Advertisement -

ஆலியா பாட் நடித்துள்ள ஹாலிவுட் படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.

தற்போது பாலிவுட் நடிகைகள் ஹாலிவுட்டில் அறிமுகம் ஆவது அதிகரித்து வருகிறது. அந்த வகையில் ஏற்கனவே பிரியங்கா சோப்ரா ஹாலிவுட்டில் பெரிய நடிகையாக உருவெடுத்துள்ளார். தீபிகா படுகோனே, ஐஸ்வர்யா ராய் ஆகியோரும் சில ஹாலிவுட் படங்களில் நடித்துள்ளனர்.
தற்போது அந்த வரிசையில் நடிகை ஆலியா பாட் இணைந்துள்ளார். உலகப் புகழ் பெற்ற வொண்டர் வுமன் பட நடிகை உடன் புதிய படத்திற்காக கைகோர்த்துள்ளார் ஆலியா.

கேல் கடோட், ஜேமி டோர்னன் மற்றும் ஆலியா பட் ஆகியோர் இணைந்து ஹார்ட் ஆஃப் ஸ்டோன் என்ற படத்தில் நடித்துள்ளார். அந்தப் படத்தின் ட்ரைலர் தற்போது ட்ரைலர் வெளியாகியுள்ளது. படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் காட்சிகளில் தெறிக்க விடுகிறது. ஆலியாவிற்கு முக்கிய கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்தப் படம் ஆகஸ்ட் 11, 2023 அன்று Netflix-ல் வெளியாக உள்ளது.

“இது நான் ஹாலிவுட்டில் நடிக்கும் முதல் பெரிய படம். முதன்முறையாக முழுநீள ஆக்ஷன் ஹாலிவுட் படத்தில் நடித்துள்ளேன். ஆனால் நான் நானும் கர்ப்பமாக இருக்கிறேன், அதனால் எனக்கு கொஞ்சம் கடினமாக இருந்தது. ஆனால் படக்குழுவினர் எனக்காக அதை சுமுகமாக மாற்றினர்.
படப்பிடிப்பை மிகவும் எளிதாகவும், எனக்கு வசதியாகவும் செய்தார்கள். நான் அவ்வளவு அழகாகவும், சிறப்பாகவும் நடத்தப்பட்டதால் இந்தப் படம் என்னால் மறக்க முடியாத ஒன்று” என்று முன்பு ஆலியா தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

MUST READ