தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன், சந்தியா தியேட்டர் வழக்கில் சிக்கி சின்னாபின்னமாகி வருகிறார். நேற்று அவர் விசாரணைக்காக சிக்கடப்பள்ளி ஸ்டேஷனுக்கு அழைக்கப்பட்டார். இதற்கு முன் அல்லு அர்ஜுனும் பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றை நடத்தியிருந்தார்.
அப்போது தன்னை நிரபராதி என்றும், இந்த வழக்கில் தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தப்படுவதாகவும் அறிவித்திருந்தார். அல்லு அர்ஜுனும், அவரது குடும்பத்தினர், புஷ்பா 2 தயாரிப்பு குழுவினரும் சந்தியா தியேட்டர் நெரிசலில் பலியான பெண்ணின் குடும்பத்தினருடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 9 வயது சிறுவன் ஷ்ரேதேஜ் சிகிச்சை குறித்து கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில், அல்லு அர்ஜுனின் தந்தை அல்லு அரவிந்த். ‘‘புஷ்பா- 2 படத்தின் தயாரிப்பாளர்கள் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உதவுவதாக கூறியுள்ளனர். 2 கோடி ரூபாய் நன்கொடை வழங்குவதாகத் தெரிவித்துள்ளனர். புஷ்பா 2 படத்தின் ஒட்டுமொத்த குழுவும் பாதிக்கப்பட்ட குடும்பத்தாருடன் இருக்கிறோம்’’ எனத் தெரிவித்துள்ளார்.