டோலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக உருவெடுத்துள்ளவர் அல்லு அர்ஜூன். ஆரம்ப காலத்தில் கமர்ஷியல் படங்களை மட்டுமே கொடுத்த கலவையான விமர்சனங்களை பெற்று வந்த அல்லு அர்ஜூன் தற்போது முன்னணி நடிகராக உயர்ந்துள்ளார். கடந்த 2021-ம் ஆண்டு அல்லு அர்ஜூன் நடிப்பில் வௌியாகி மாபெரும் ஹிட் அடித்த திரைப்படம் புஷ்பா தி ரைஸ். இப்படத்தை, பிரபல தெலுங்கு இயக்குநர் சுகுமார் இயக்கியிருந்தார். இப்படத்தில் நாயகியாக ராஷ்மிகா மந்தான நடித்திருப்பார். சுனில், ஃபகத் பாசில், பிரசாந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்தித்தில் நடித்திருந்தனர். தேவி 2 பிரசாத் படத்திற்கு இசை அமைத்திருந்தார்.
முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது, புஷ்பா தி ரூல் என்ற பெயரில் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இரண்டாம் பாகத்திலும் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, சுனில், ஃபகத் ஃபாசில் ஆகியோர் நடிக்கின்றனர். மைத்ரி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
#Alluarjun #Pushpa2TheRule
pic.twitter.com/r5ZEaDCVle— Let’sCinema (@Trending_vi) March 10, 2024