முன்னாள் அமைச்சர் கே.டி. ராமாராவ், நடிகர் அல்லு அர்ஜுன் கைதுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.கடந்த டிசம்பர் 5ஆம் தேதி அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா 2 திரைப்படம் உலகம் முழுவதும் திரையிடப்பட்டது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் விமர்சன ரீதியாக மட்டுமல்லாமல் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று சுமார் ஆயிரம் கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து வெற்றி நடை போட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த டிசம்பர் 5ஆம் தேதி ஹைதராபாத்தில் புஷ்பா 2 படத்தில் சிறப்பு காட்சி திரையிடப்பட்ட போது நடிகர் அல்லு அர்ஜுன் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி திரையரங்கிற்கு வருகை தந்ததால் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டு ரேவதி என்ற பெண் ஒருவர் பலியானார். இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வந்த போலீசார் திரையரங்கு உரிமையாளர் உட்பட மூன்று பேரை கைது செய்திருந்தனர். அதைத்தொடர்ந்து (இன்று) டிசம்பர் 13 நடிகர் அல்லு அர்ஜுனையும் கைது செய்துள்ளனர். இந்த தகவல் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதேசமயம் முன்னாள் அமைச்சர் கே.டி.ராமராவ், அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டதற்காக தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், “தேசிய விருது வென்ற நடிகர் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டது ஆட்சியாளர்களின் பாதுகாப்பின்மையின் உச்சம். கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நான் முற்றிலும் அனுதாபம் தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால் உண்மையில் தோல்வி அடைந்தது யார்? அல்லு அர்ஜுன் நேரடியாக பொறுப்பேற்காத ஒரு விஷயத்திற்கு அவர் ஒரு சாதாரண குற்றவாளி போல் நடத்தப்படுகிறார். மரியாதை மற்றும் நன்நடத்தைக்கு எப்போதும் இடம் உண்டு. அரசின் அத்துமீறல் நடவடிக்கையை நான் வன்மையாக கண்டிக்கிறேன். ஹைதராபாத்தில் ஹைட்ரா நடவடிக்கையால் இறந்த இரண்டு அப்பாவிகளின் மரணத்திற்கு காரணமான ரேவந்த் ரெட்டியை அதே லாஜிக்கை பின்பற்றி கைது செய்ய வேண்டும்” என்று குறிப்பிட்டு பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
- Advertisement -