பிரபல தயாரிப்பாளரான அல்லு அரவிந்தின் இரண்டாவது மகன்தான் அல்லு அர்ஜுன். இவர் தனது மூன்று வயதிலேயே தன்னுடைய தந்தை தயாரித்திருந்த படத்தின் மூலம் திரையில் தோன்றினார். அதைத்தொடர்ந்து 2001 ஆம் ஆண்டு டாடி படத்தில் நடித்திருந்தார். பின்னர் கங்கோத்ரி படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அதன் பிறகு 2004 இல் சுகுமார் இயக்கத்தில் வெளியான ஆர்யா திரைப்படத்தில் நடித்து பெயர் பெற்றார். இந்த படம் தெலுங்கு ரசிகர்களிடம் மட்டுமல்லாமல் மலையாள ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று 100 நாட்களைக் கடந்து திரையரங்குகளில் ஓடியது. இவர் தன்னுடைய துறு துறு நடிப்பினால் ஏராளமான ரசிகர்களை சேகரித்து வைத்துள்ளார். குறிப்பாக பெண் ரசிகைகள் ஏராளம். அதுமட்டுமில்லாமல் இவருடைய நடனத்திற்கும் தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கின்றன. அந்த வகையில் எந்த மாதிரியான நடனமானாலும் உடம்பை வளைத்து நெளித்து அசால்டாக ஆடி ரசிகர்களை கவர்ந்து விடுவார். கிட்டத்தட்ட 20 படங்களில் நடித்துள்ள பாடுவதிலும் ஆர்வம் உடையவர். இவர் தன்னுடைய தனித்துவமான நடிப்பின் மூலம் ஸ்டைலிஷ் ஸ்டார், மிஸ்டர் பர்ஃபெக்ட் இன்று ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார். இவர் நடிப்பில் வெளியான அல வைகுண்டபுரமுலு போன்ற படங்கள் ரசிகர்களின் ஃபேவரைட் படங்களாகும். இவர் தன்னுடைய சிறந்த நடிப்பிற்காக நான்கு ஃபிலிம் ஃபேர் விருதுகளை வென்றுள்ளார். குறிப்பாக இவர் நடிப்பில் கடந்த 2021 இல் வெளியான புஷ்பா திரைப்படம் இந்திய அளவில் அல்லு அர்ஜுன் பிரபலமாக்கி தேசிய விருதையும் பெற்று தந்தது. அதைத்தொடர்ந்து தற்போது புஷ்பா 2 திரைப்படத்தில் அல்லு அர்ஜுன் நடித்து வருகிறார். இந்த படம் வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இன்று தன்னுடைய 42வது பிறந்த நாளை கொண்டாடி வரும் அல்லு அர்ஜுனுக்கு நாமும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து மகிழ்வோம்.