Homeசெய்திகள்சினிமாஅனிமல் படம் பார்த்து ஒட்டு மொத்த படக்குழுவையும் வாழ்த்திய அல்லு அர்ஜுன்!

அனிமல் படம் பார்த்து ஒட்டு மொத்த படக்குழுவையும் வாழ்த்திய அல்லு அர்ஜுன்!

-

- Advertisement -

அனிமல் படம் பார்த்து ஒட்டு மொத்த படக்குழுவையும் வாழ்த்திய அல்லு அர்ஜுன்!இந்திய அளவில் பெரிய ரசிகர் பட்டாளத்தைக் கொண்டிருப்பவர் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன். அல வைகுந்த புரமுலோ, புஷ்பா போன்ற படங்கள் இந்திய அளவில் நல்ல வரவேற்பு பெற்றன. தற்போது புஷ்பா 2 படத்தில் நடித்து வருகிறார் அல்லு அர்ஜுன். இவர் சமீபத்தில் சந்திப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடித்து வெளிவந்து பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கும் அனிமல் படத்தை பார்த்துள்ளார். இப்படத்தின் மீதான தன்னுடைய ரிவ்யூவை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார் அல்லு அர்ஜுன்.”அனிமல் புத்திசாலித்தனமான திரைப்படம். நடிகர் ரன்பீர் கபூர் இந்திய நடிகர்களின் நடிப்பினை அடுத்த கட்டத்திற்கு மாற்றியமைத்துள்ளார். ரன்பீர் நடத்திய மேஜிக்கை என்னால் மறக்க முடியவில்லை. ரன்பீர் கபூரின் உழைப்பிற்கு நான் மரியாதை செலுத்துகிறேன் என்று வாழ்த்தி உள்ளார்.
படத்தின் நாயகியான ரஷ்மிகாவை “அனிமல் படம் தான் இதுவரை நடித்த படங்களிலேயே உன்னுடைய பெஸ்ட்” என்று புகழ்ந்துள்ளார்.
படத்தின் வில்லனான பாபி தியோலை “உங்கள் மௌனத்தினாலேயே ஒரு டெரரான பெர்ஃபாமன்ஸைக் கொடுத்துள்ளீர்கள்”என்றும்,
அனில் கபூரை “உங்கள் விவேகத்தையும் அனுபவத்தையும் கண்டு வியக்கிறேன்”என்றும் பாராட்டியுள்ளார்.
படத்தின் இரண்டாம் பகுதியில் சிறிய ரோலில் வரும் நாயகியான த்ருப்தியை “எங்கள் இதயங்களை நொறுக்கி விட்டீர்கள்” எனவும் பாராட்டியுள்ளார்.
மேலும் படத்தில் பணிபுரிந்த அனைத்து டெக்னீசியன்களுக்கும் தன் மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.அனிமல் படம் பார்த்து ஒட்டு மொத்த படகுழுவையும் வாழ்த்திய அல்லு அர்ஜுன்!இறுதியாக படத்தின் இயக்குனரான சந்தீப் ரெட்டி வங்காவை “சந்தீப், நீங்கள் இந்திய சினிமாவின் வரையறையை உடைத்து விட்டீர்கள். உங்களுடைய படைப்பால் நாங்கள் பெருமைப்படுகிறோம். உங்களுடைய திரைப்படங்கள் இந்திய சினிமாவின் முகத்தை மாற்றுவதை தற்போதும், எதிர்காலத்திலும் நாங்கள் பார்க்கப் போகிறோம். அனிமல் இந்திய அளவிலான கிளாசிக் திரைப்படங்களில் இணைந்து விட்டது”என்றும் பெருமையுடன் பாராட்டி பதிவிட்டுள்ளார். இப்பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அனிமல் திரைப்படம் எதிர்மறையான விமர்சனங்களை பெற்றாலும் வட இந்தியாவில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது அந்த வகையில் வெளியான ஒரே வாரத்தில் 527 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ