Homeசெய்திகள்சினிமாபெண் உயிரிழந்த வழக்கில் அல்லு அர்ஜுனுக்கு ஜாமீன்!

பெண் உயிரிழந்த வழக்கில் அல்லு அர்ஜுனுக்கு ஜாமீன்!

-

- Advertisement -
kadalkanni

பெண் உயிரிழந்த விவகாரத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.பெண் உயிரிழந்த வழக்கில் அல்லு அர்ஜுனுக்கு ஜாமீன்!

நடிகர் அல்லு அர்ஜுன் தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவரது நடிப்பில் கடந்த டிசம்பர் 5ஆம் தேதி புஷ்பா 2 திரைப்படம் உலகம் முழுவதும் வெளியான நிலையில் இப்படம் சுமார் ரூ. 1700 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது. என் நிலையில் தான் கடந்த டிசம்பர் 4ஆம் தேதி ஐதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியை பார்க்க வந்த ரேவதி என்ற பெண் ரசிகை கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார். இந்த விவகாரம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மேலும் இது தொடர்பான வழக்கில் அல்லு அர்ஜுன், திரையரங்கு உரிமையாளர் உள்ளிட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டு நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதன்படி நடிகர் அல்லு அர்ஜுன் கடந்த டிசம்பர் 13ஆம் தேதி கைது செய்யப்பட்டார். பின்னர் சில மணி நேரங்களிலேயே அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து சிக்கட்பள்ளி காவல் நிலையத்தில் அல்லு அர்ஜுனிடம் விசாரணை நடத்தப்பட்டது.பெண் உயிரிழந்த வழக்கில் அல்லு அர்ஜுனுக்கு ஜாமீன்! இதற்கிடையில் அல்லு அர்ஜுன் நிரந்தர ஜாமீன் வழங்கும் படி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதேசமயம் அல்லு அர்ஜுனின் ஜாமீன் மனுவை எதிர்த்து காவல்துறையினரும் பதில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு கடந்த டிசம்பர் 30ஆம் தேதி விசாரணைக்கு வந்த நிலையில் 2025 ஜனவரி 3ஆம் தேதி தீர்ப்பு வழங்குவதாக நீதிபதி இந்த வழக்கினை ஒத்தி வைத்திருந்தார். அதன் அடிப்படையில் இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் அல்லு அர்ஜுனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

MUST READ