Homeசெய்திகள்சினிமாஎன்னுடைய முன்னேற்றத்தில் அவருக்கும் பங்கு இருக்கிறது.... 'புஷ்பா' பட இயக்குனர் குறித்து அல்லு அர்ஜுன்!

என்னுடைய முன்னேற்றத்தில் அவருக்கும் பங்கு இருக்கிறது…. ‘புஷ்பா’ பட இயக்குனர் குறித்து அல்லு அர்ஜுன்!

-

புஷ்பா பட இயக்குனர் சுகுமார் குறித்து அல்லு அர்ஜுன் பேசியுள்ளார்.

கடந்த 2007 ஆம் ஆண்டு அல்லு அர்ஜுன் நடிப்பில் ஆர்யா எனும் திரைப்படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றி படமாக அமைந்த இந்த படத்தினை சுகுமார் இயக்கியிருந்தார். அதை தொடர்ந்து ஆர்யா 2 திரைப்படத்தையும் இயக்கி இருந்தார் சுகுமார்.
என்னுடைய முன்னேற்றத்தில் அவருக்கும் பங்கு இருக்கிறது.... 'புஷ்பா' பட இயக்குனர் குறித்து அல்லு அர்ஜுன்! இதைத்தொடர்ந்து மீண்டும் அல்லு அர்ஜுன் – சுகுமார் கூட்டணி புஷ்பா – தி ரைஸ் எனும் திரைப்படத்தில் இணைந்தது. இந்த படமும் இந்திய அளவில் சூப்பர் டூப்பர் ஹிட்டாகி அல்லு அர்ஜுன் தேசிய விருது பெற காரணமாக அமைந்தது. அடுத்தது மீண்டும் இந்த கூட்டணி புஷ்பா 2 – தி ரூல் திரைப்படத்தில் இணைந்திருக்கும் நிலையில் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஆரம்பத்திலிருந்தே அதிகமாக இருந்து வருகிறது. அதன்படி வருகின்ற டிசம்பர் 5ஆம் தேதி இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் உலகம் முழுவதும் திரைக்கு வர தயாராகி வருகிறது. அதே வேளையில் படத்தினைக்கான ரசிகர்களும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் சென்னையில் ப்ரோமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் தமிழில் பேசிய அல்லு அர்ஜுன், ராஷ்மிகாவுடன் இணைந்து நடித்த அனுபவம் குறித்தும் ஸ்ரீ லீலாவின் நடனம் குறித்தும் பேசினார். என்னுடைய முன்னேற்றத்தில் அவருக்கும் பங்கு இருக்கிறது.... 'புஷ்பா' பட இயக்குனர் குறித்து அல்லு அர்ஜுன்!தொடர்ந்து பேசிய அவர், “நாடு முழுவதும் இந்த படத்தை ப்ரோமோஷன் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். அதேசமயம் படத்தின் தரத்தை இன்னும் மேம்படுத்த தற்போது வரை கடினமாக உழைத்துக் கொண்டிருக்கும் இயக்குனர் சுகுமாரின் அர்ப்பணிப்பிற்கு தலை வணங்குகிறேன். என்னுடைய முதல் படம் நடித்த பின்னர் ஒரு வருடம் பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்தேன். அப்போதுதான் சுகுமார் சார், ஆர்யா படத்துடன் வந்தார். ஆர்யா படம் இல்லை என்றால் இன்று நான் இல்லை. என் வாழ்வின் முன்னேற்றத்தில் சுகுமார் சாருக்கு முக்கிய பங்கு உண்டு” என்று பேசினார்.

MUST READ