Homeசெய்திகள்சினிமாஅல்லு அர்ஜூன் நடிக்கும் புதிய படம்

அல்லு அர்ஜூன் நடிக்கும் புதிய படம்

-

அல்லு அர்ஜூன் நடிக்கும் புதிய படம்

சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியானது

இந்தியாவின் பவர்ஹவுஸ் தயாரிப்பாளர் பூஷன் குமார், இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா மற்றும் இந்திய சூப்பர் ஸ்டார் அல்லு அர்ஜுன் ஆகியோர் ஒரு மிகப்பெரிய படத்திற்காக ஒன்றிணைந்துள்ளனர். டி-சீரிஸ் ஃபிலிம்ஸ் புரொடக்‌ஷன் மற்றும் பத்ரகாளி பிக்சர்ஸ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.

தயாரிப்பாளர் பூஷன் குமார், பிரனய் ரெட்டி வங்கா, இணை தயாரிப்பாளர் ஷிவ் சனானா மற்றும் இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா மற்றும் சூப்பர் ஸ்டார் அல்லு அர்ஜுன் ஆகியோர் சமீபத்தில் இந்த மிகப்பிரம்மாண்டமான படத்தை முறையாக சாத்தியப்படுத்த சந்தித்தனர். டி-சீரிஸ் பிலிம்ஸ் புரொடக்‌ஷன் மற்றும் பத்ரகாளி பிக்சர்ஸ் தயாரிக்கும் சந்தீப் வாங்காவின் ஸ்பிரிட் படத்தின் படப்பிடிப்பை அல்லு அர்ஜூன் முடித்தவுடன் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும். புஷ்பா படத்தை தொடர்ந்து அல்லு அர்ஜூன் நடிக்கும் அடுத்த படம் என்பதால் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

MUST READ