நடிகர் அல்லு அர்ஜுன் ஹீரோ மற்றும் வில்லனாக நடிக்கப் போகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் புஷ்பா 2 திரைப்படம் வெளியானது. மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியான இந்த படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து சுமார் ரூ. 1800 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்தது. மேலும் 2028ல் புஷ்பா 3 திரைப்படம் வெளியாகும் என தயாரிப்பாளர் ரவிசங்கர் சமீபத்தில் அப்டேட் கொடுத்திருந்தார். இதற்கிடையில் அல்லு அர்ஜுன், த்ரிவிக்ரம் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியானது.
அதேசமயம் அல்லு அர்ஜுன், அட்லீ கூட்டணியில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் புதிய படம் ஒன்று உருவாகப் போவதாகவும் இந்த படத்தில் சிவகார்த்திகேயன், ரஜினி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளதாகவும் சமீப காலமாக தொடர்ந்து பல தகவல்கள் சமூக வலைதளங்களை தீயாய் பரவி வருகிறது. இருப்பினும் இந்த படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கப் போகிறதா? அல்லது ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கப் போகிறதா? என்பது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. வருகின்ற ஏப்ரல் 8ஆம் தேதி அல்லு அர்ஜுனின் பிறந்தநாளை முன்னிட்டு இது தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இந்த படம் தொடர்பான கூடுதல் அப்டேட் ஒன்று வெளியாகி ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதாவது அல்லு அர்ஜுன் இந்த படத்தில் இரட்டை வேடங்களில் ஹீரோவாகவும், வில்லனாகவும் நடிக்க உள்ளார் எனவும் இந்த படத்தின் படப்பிடிப்பு 2025 ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கும் என்றும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படம் அதிகமான VFX இல் உருவாகும் எனவும் சொல்லப்படுகிறது. மேலும்
- Advertisement -