Homeசெய்திகள்சினிமாஅல்லு அர்ஜுன் - சுகுமார் கூட்டணியின் 'புஷ்பா 2'... லேட்டஸ்ட் அப்டேட்!

அல்லு அர்ஜுன் – சுகுமார் கூட்டணியின் ‘புஷ்பா 2’… லேட்டஸ்ட் அப்டேட்!

-

அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் ‘புஷ்பா 2’ படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

இயக்குனர் சுகுமாரன் இயக்கத்தில் கடந்த வருடம் டிசம்பர் 13ஆம் தேதி வெளிவந்த புஷ்பா படத்தின் முதல் பாகமான ‘புஷ்பா தி ரைஸ்’ தென்னிந்தியா மட்டும் இல்லாமல் பான் இந்தியா அளவில்  சினிமா ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்றது. அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் உள்ளிட்டோர் நடித்திருந்த இத்திரைப்படம் பான் இந்தியா அளவில் வெளியாகி ரூபாய் 500 கோடி வரை வசூலித்து சாதனை செய்தது.

தற்போது அல்லு அர்ஜூன் நடிப்பில் புஷ்பா படத்தின் இரண்டாம் பாகமான ‘புஷ்பா தி ரூல்‘ உருவாகி வருகிறது.

புஷ்பா படத்தின் முதல் பாகத்தில் பகத் பாசில் வில்லனாக வந்து மிரட்டியிருந்தார். வனத்துறை அதிகாரியாக வந்த அவர் நடிப்பால் அல்லு அர்ஜூனுக்கு இணையாக திரையில் ஜொலித்தார். இரண்டாம் பாகத்தில் அவருக்கு அதிக காட்சிகள் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் தற்போது அவர் புஷ்பா 2-வில் அவர் நடித்த படப்பிடிப்பு காட்சிகள் முடிந்து விட்டதாகவும் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் நிறைவடைய இருக்கிறது. எனவே இந்த படம் இந்த ஆண்டின் இறுதியில் அல்லது அடுத்த ஆண்டின் துவக்கத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ