Homeசெய்திகள்சினிமாஇளையராஜா கூட படம் பண்ணப் போறேன்... ப்ரேமம் இயக்குனர் சுவாரசியத் தகவல்!

இளையராஜா கூட படம் பண்ணப் போறேன்… ப்ரேமம் இயக்குனர் சுவாரசியத் தகவல்!

-

- Advertisement -

மலையாள இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இளையராஜாவைச் சந்தித்துள்ளார்.

மலையாளத்தில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் அல்போன்ஸ் புத்திரன். சில படங்கள் மட்டுமே இயக்கியிருந்தாலும் தனது உயிர்ப்புமிக்க வித்தியாசமான கதைக்களங்கள் மூலம் தனக்கென ரசிகர்களை உருவாக்கியுள்ளார். ‘ப்ரேமம்’ படத்தின் மூலம் உலக ரசிகர்களை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தார் அல்போன்ஸ் புத்திரன்.

கடைசியாக இவர் இயக்கத்தில் பிரித்விராஜ் மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியான ‘கோல்டு’ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

இந்நிலையில் அடுத்து அவரது படம் குறித்து எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்நிலையில் அல்போன்ஸ் புத்திரன் இசைஞானி இளையராஜாவை சமீபத்தில்  சந்தித்துள்ளார். இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர்

“சில நாட்களுக்கு முன் தமிழ் இசையின் ராஜா மேஸ்ட்ரோ இளையராஜாவை மூன்றாவது முறையாக சந்தித்தேன். இந்த முறை நான் புகைப்படம் எடுக்க மறக்கவில்லை. அவரைப் பற்றி நான் விளக்க வேண்டியதில்லை. ரோமியோபிக்சர்ஸுடன் நான் கூட்டணி அமைக்கும் படத்தை அடுத்து, மேஸ்ட்ரோ இளையராஜா சாருடன் இணைந்து ஒரு படத்தில் பணியாற்றுவேன்.” என்று தெரிவித்துள்ளார்.

MUST READ