Homeசெய்திகள்சினிமாமனிதநேயம் இல்லாதவர் நடிகை அமலா பால்... பிரபல மேக்கப் கலைஞர் குற்றச்சாட்டு...

மனிதநேயம் இல்லாதவர் நடிகை அமலா பால்… பிரபல மேக்கப் கலைஞர் குற்றச்சாட்டு…

-

நடிகை அமலா பால் தன்னை அவமதித்ததாக பிரபல ஒப்பனை கலைஞர் ஹேமா குற்றம் சாட்டி இருக்கிறார். 
மைனா படத்தின் வெற்றி அமலா பாலுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வர முக்கிய காரணமாக அமைந்தது. தொடர்ந்து விஜய், தனுஷ், அதர்வா, சூர்யா, ஜெயம் ரவி, விஷ்ணு விஷால் என கோலிவுட்டின் அனைத்து சூப்பர் ஹீரோக்களுடன் கூட்டணி அமைத்து நடித்தார். அனைத்து படங்களும் ஹிட் அடித்தன. தமிழில் முன்னணி நடிகையாக உருவெடுத்த நடிகை அமலா பால், அடுத்து தெலுங்கிலும் முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

இதனிடையே அவர் காதலித்து திருமணம் செய்து கொண்ட இயக்குநர் ஏ.எல். விஜய்யை கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்தார். அண்மையில், தனது நீண்ட நாள் காதலன் ஜெகத் தேசாயை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். திருமணம் நடந்து 2 மாதங்கள் முடிவதற்கு முன்பாகவே தான் கர்ப்பமாக உள்ளதாக அறிவித்தார். அண்மையில் அவருக்கு ஆண் குழந்தையும் பிறந்தது.

கோலிவுட் முதல் பாலிவுட் வரை உள்ள மேக்கப் கலைஞர்களில் பிரபலமானவர் ஹேமா. இவர் பல முன்னணி நடிகைகளுக்கு மேக்கப் போட்டுள்ளார். அண்மையில் இவர் அளித்த பேட்டியில் நடிகை அமலா பாலுடன் ஏற்பட்ட கசப்பான அனுபவத்தை பகிர்ந்துள்ளார். சென்னையில் அமலா பாலுடன் படப்பிடிப்புக்கு சென்றபோது, வெயில் தாங்க முடியாமல் தானும் தனது குழுவும் கேரவனில் அமர்ந்தோம். இதை அறிந்த அமலா பால், மேனஜரை அனுப்பி உடனடியாக எங்களை வெளியேற்றினார். வெயிலில் உட்கார இடம் இல்லாமல் திணறினோம், கொஞ்சம் கூட மனிதாபிமானமே இல்லாமல் நடந்து கொண்டார் என்றும் அவர் குற்றம் சாட்டி இருக்கிறார்.

MUST READ