Homeசெய்திகள்சினிமாஇரட்டை குழந்தைகளுக்கு தாயாகிறாரா அமலாபால்?

இரட்டை குழந்தைகளுக்கு தாயாகிறாரா அமலாபால்?

-

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் அமலாபால். இவர் 2010 ஆம் ஆண்டு வெளியான சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இருந்தாலும் மைனா திரைப்படம் தான் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது. இரட்டை குழந்தைகளுக்கு தாயாகிறாரா அமலாபால்?பின்னர் நிமிர்ந்து நில், தெய்வத்திருமகள், ராட்சசன், வேலையில்லா பட்டதாரி போன்ற பல படங்களில் நடித்து ஏராளமான ரசிகர்களை சேகரித்து வைத்துக் கொண்டார். அதே சமயம் இவர் தமிழில் மட்டுமல்லாமல் மலையாள படங்களிலும் நடித்து வருபவர். கடைசியாக இவர் பிரித்விராஜுடன் இணைந்து நடித்துள்ள ஆடு ஜீவிதம் திரைப்படம் வருகின்ற மார்ச் 28ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதற்கிடையில் இயக்குனர் ஏ எல் விஜயை திருமணம் செய்து கொண்ட இவர் ஒரு சில காரணங்களால் அவரிடம் இருந்து விவாகரத்து பெற்றுக் இதற்கிடையில் இயக்குனர் ஏ எல் விஜயை திருமணம் செய்து கொண்ட இவர் ஒரு சில காரணங்களால் அவரிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்து சென்றார். பின்னர் ஜகத் தேசாய் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்ட அமலாபால் சமீபத்தில் தான் கர்ப்பமாக இருப்பதை அறிவித்திருந்தார். இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குழந்தையுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு மகிழ்ச்சியான இரண்டு குழந்தைகள் என்று பதிவிட்டுள்ளார். இரட்டை குழந்தைகளுக்கு தாயாகிறாரா அமலாபால்? இந்த பதிவினை கண்டு ரசிகர்கள் அமலாபாலுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறக்க இருப்பதே தான் அவர் மறைமுகமாக தெரிவித்துள்ளார் என்று பலரும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இது ஒரு தரப்பில் இருந்தாலும் இன்னொரு தரப்பில் அந்த புகைப்படத்தில் இருக்கும் குழந்தையை தவிர தன்னையும் ஒரு குழந்தை என்று தான் இரண்டு குழந்தைகள் என்று அமலாபால் குறிப்பிட்டுள்ளார் என்றும் கூறி வருகின்றனர்.

MUST READ