Homeசெய்திகள்சினிமாவிலைமதிப்பற்ற கர்ப்பப் பயணம்... கணவருக்கு நன்றி தெரிவித்த அமலாபால்...

விலைமதிப்பற்ற கர்ப்பப் பயணம்… கணவருக்கு நன்றி தெரிவித்த அமலாபால்…

-

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் அமலா பால். கேரளாவைச் சேர்ந்த நடிகை அமலாபால், ‘நீலதாமரா’ என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார். தமிழில் ‘வீரசேகரன்’ படத்தின் மூலம் களமிறங்கினார். அதன்பிறகு ‘சிந்து சமவெளி’ படத்தில் நடித்தார். இதைத் தொடர்ந்து அவர் நடித்த திரைப்படம் தான் மைனா.இத்திரைப்படம் அமலாபாலுக்கு தமிழில் புதிய பாதையை போட்டுத் தந்தது. மைனா படத்தின் வெற்றி அமலா பாலுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வர முக்கிய காரணமாக அமைந்தது.

இதனிடையே அவர் காதலித்து திருமணம் செய்து கொண்ட இயக்குநர் ஏ.எல். விஜய்யை கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்தார். இதைத் தொடர்ந்து, தனது நீண்ட நாள் காதலன் ஜெகத் தேசாயை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். திருமணம் நடந்து 2 மாதங்கள் முடிவதற்கு முன்பாகவே தான் கர்ப்பமாக உள்ளதாக அறிவித்தார்.

இந்நிலையில், கர்ப்பிணியாக இருக்கும் அமலா பாலை மகிழ்ச்சியுடன் வைத்திருப்பதற்காக அவரது கணவர் ஜெகத் தேசாய் அருகிலேயே இருந்து கவனித்து வருகிறாராம். இதற்கு நன்றி தெரிவித்து அமலா பால் சமூக வலைதளங்களில் பதிவிட்டு உள்ளார். விலைமதிப்பற்ற கர்ப்ப கால பயணத்தை மகிழ்ச்சியுடன் கொண்டு செல்வதாகவும், கணவரின் அன்பை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை என்றும் பதிவிட்டிருக்கிறார்.

MUST READ