கோவா சென்றுள்ள நடிகை அமலாபால், அங்கு தனது கணவருடன் எடுத்துள்ள புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் அமலா பால். கேரளாவைச் சேர்ந்த நடிகை அமலாபால், ‘நீலதாமரா’ என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார். தமிழில் ‘வீரசேகரன்’ படத்தின் மூலம் களமிறங்கினார். அதன்பிறகு ‘சிந்து சமவெளி’ படத்தில் நடித்தார். இத்திரைப்படம் பெரும் விமர்சனத்திற்கு ஆளானது. இதில் நடிகர் ஹரிஸ் கல்யாணும் நடித்திருப்பார். இதைத் தொடர்ந்து அவர் நடித்த திரைப்படம் தான் மைனா. பிரபு சாலமன் இப்படத்தை இயக்கினார். இத்திரைப்படம் அமலாபாலுக்கு தமிழில் புதிய பாதையை போட்டுத் தந்தது.
மைனா படத்தின் வெற்றி அமலா பாலுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வர முக்கிய காரணமாக அமைந்தது. தொடர்ந்து விஜய், தனுஷ், அதர்வா, சூர்யா, ஜெயம் ரவி, விஷ்ணு விஷால் என கோலிவுட்டின் அனைத்து சூப்பர் ஹீரோக்களுடன் கூட்டணி அமைத்து நடித்தார். அனைத்து படங்களும் ஹிட் அடித்தன. இதனிடையே அவர் காதலித்து திருமணம் செய்து கொண்ட இயக்குநர் ஏ.எல். விஜய்யை கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்தார்.
https://www.instagram.com/reel/C2NAw5-PcPt/?igsh=Nnd2aW93dHk3MTIz