நடிகை அமலாபால் மகனுடன் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
நடிகை அமலாபால் தமிழ் சினிமாவில் பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான மைனா என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர். இந்த படத்தில் இவருடைய நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது. அதைத்தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பெயரையும் புகழையும் பெற்றார் அமலாபால். அந்த வகையில் இவர் தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்து வருகிறார். மேலும் வெப் தொடர்களில் நடிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார். இதற்கு இடையில் தான் நடிகை அமலாபால், இயக்குனர் ஏ.எல் விஜயை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் இவர்களின் திருமண வாழ்க்கை சில வருடங்களிலேயே முடிவுக்கு வந்தது. அதன் பின்னர் ஜெகத் தேசாய் என்பவரை காதலித்த அமலா பால் திருமணத்திற்கு முன்பாகவே கர்ப்பமானதாக சொல்லப்படுகிறது. அதைத் தொடர்ந்து அமலாபால் மற்றும் ஜெகத் தேசாய் இருவரும் கடந்த 2023 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். பின்னர் இவர்கள் இருவருக்கும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு இலய் என்று பெயர் வைத்திருந்தனர்.
View this post on Instagram
மேலும் சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருந்து வந்தார் அமலாபால். அதன்படி தனது குடும்பத்துடன் குழந்தையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பகிர்ந்து வந்தார். தற்போது தனது மகனுடன் எடுத்துக் கொண்ட புதிய புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அமலாபாலின் மகன் இலய் க்யூட்டாக போஸ் கொடுக்க இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.