- Advertisement -
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் அக்டோபர் 31ஆம் தேதி வெளியான அமரன் திரைப்படம் உலகம் முழுவதும் வணிக ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது.
மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்டிருந்த இப்படத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு. க ஸ்டாலின் உட்பட பல அரசியல் தலைவர்களும் பாராட்டி இருந்தனர்.
இந்நிலையில் நடிகரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் ஆன விஜய் அமரன் படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி நேரில் அழைத்து வாழ்த்தியுள்ளார். இது தொடர்பாக இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி தனது எக்ஸ் தல பக்கத்தில் விஜய் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
‘விடுதலை 2’ பட மேடையில் டென்ஷனாகி மைக்கை வைத்துச் சென்ற வெற்றிமாறன்!