Homeசெய்திகள்சினிமாநான் என்றுமே அவருக்கு கடமைப்பட்டிருக்கிறேன்...... 'அமரன்' பட இயக்குனர் வெளியிட்ட பதிவு!

நான் என்றுமே அவருக்கு கடமைப்பட்டிருக்கிறேன்…… ‘அமரன்’ பட இயக்குனர் வெளியிட்ட பதிவு!

-

- Advertisement -

அமரன் பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.நான் என்றுமே அவருக்கு கடமைப்பட்டிருக்கிறேன்...... 'அமரன்' பட இயக்குனர் வெளியிட்ட பதிவு!

ராஜ்குமார் பெரியசாமி தமிழ் சினிமாவில் கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியான ரங்கூன் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். அதைத்தொடர்ந்து இவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் அமரன் திரைப்படத்தை இயக்கியிருந்தார். மறைந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு இருந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து ராஜ்குமார் பெரியசாமி, தனுஷின் 55வது திரைப்படத்தை இயக்குவதற்கு கமிட் ஆகியுள்ளார். மேலும் இவர் பாலிவுட்டில் அறிமுகமாக போகிறார் எனவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் ராஜ்குமார் பெரியசாமி தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், “மணிரத்னம் சார் நான் திரைப்படங்கள் பற்றி கனவு காணவும், திரைப்படங்கள் இயக்குவதற்கும் நீங்கள்தான் காரணம். முதலில் நான் உங்களுடன் போட்டோ எடுக்க விரும்பினேன். அதன்படி 2005 இல் உங்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டேன். ஆனால் அதை தொலைத்துவிட்டேன். மீண்டும் உங்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள எனக்கு இரண்டு தசாப்தங்கள் மற்றும் இரண்டு படங்கள் தேவைப்பட்டன. அமரன் படத்திற்கும் எனக்கும் நீங்கள் அளித்த ஊக்குவிப்புக்கு நன்றி. மணிரத்னம் சார் அவர்களுக்கு நான் என்றும் கடமைப்பட்டிருக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

MUST READ