நடிகர் சிவகார்த்திகேயன் ஆரம்பத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுப்பாளராக பணியாற்றி அப்பொழுதே ஏராளமான ரசிகர்களை சேகரித்து வைத்திருந்தவர். அதன் பின்னர் தனுஷுடன் இணைந்து 3 திரைப்படத்தில் நடித்தார். பின்னர் ஹீரோவாக உருவெடுத்த சிவகார்த்திகேயன் தொடர்ந்து பல வெற்றி படங்களை தந்து தற்பொழுது தவிர்க்க முடியாத நடிகராக மாறியுள்ளார். கடைசியாக இவரது நடிப்பில் அயலான் திரைப்படம் வெளியான நிலையில் அடுத்ததாக வருகின்ற அக்டோபர் 31 தீபாவளி தினத்தை முன்னிட்டு அமரன் எனும் திரைப்படம் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்க சாய் பல்லவி கதாநாயகியாக நடித்திருக்கிறார். போஸ் வெங்கட் வில்லனாக நடித்துள்ளார். கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்திருக்கிறது. ஜி.வி. பிரகாஷ் இதற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தை ரங்கூன் பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி எழுதி இயக்கி இருக்கிறார். ராணுவத்தின் பின்னணியில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே நிறைவடைந்து தற்போது அடுத்த கட்ட வேலைகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இதற்கிடையில் இந்த படத்தின் டீசரும் அடுத்தடுத்த போஸ்டர்களும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோவில் படக்குழுவினரின் கடின உழைப்பு தெரிகிறது. மேலும் கமல்ஹாசனின் குரலில் இடம்பெற்ற போர் செல்லும் வீரன் எனும் பாடல் அனைவரையும் மெய்சிலிர்க்க வைக்கிறது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களை ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.