சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் அமரன். இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ராணுவ அதிகாரியாக நடித்திருக்கிறார். அதாவது இந்த படமானது மறைந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தினை ரங்கூன் படத்தின் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருக்கிறார். கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் படத்தினை தயாரித்துள்ளது. ஜி.வி. பிரகாஷ் இதற்கு இசையமைத்திருக்கிறார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடித்துள்ளார். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி இருக்கும் இந்த படமானது வருகின்ற அக்டோபர் 31 தீபாவளி தினத்தன்று திரைக்கு வர இருக்கிறது. அதற்கான முழு ஏற்பாடுகளும் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதன்படி ஏற்கனவே இந்த படத்தின் அடுத்தடுத்த போஸ்டர்களும் டீசரும் வெளியாகி ரசிகர்களின் கவனம் ஈர்த்தது.
Witness the Heart behind the Warriors shield.
From Tomorrow #Amaran #AmaranDiwali #AmaranOctober31#Ulaganayagan #KamalHaasan #Sivakarthikeyan #SaiPallavi #RajkumarPeriasamyA Film By @Rajkumar_KP@ikamalhaasan @Siva_Kartikeyan #Mahendran @gvprakash @anbariv @Sai_Pallavi92 pic.twitter.com/K7e9A3YUxq
— Raaj Kamal Films International (@RKFI) September 26, 2024
அடுத்ததாக இந்த படத்திலிருந்து ஹே மின்னலே என முதல் பாடல் விரைவில் வெளியாகும் என ஜி.வி. பிரகாஷ் அப்டேட் கொடுத்திருந்தார். இந்த நிலையில் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் வீடியோ ஒன்றை வெளியிட்டு நாளை முதல் ஹார்ட் ஆஃப் அமரன் என்று குறிப்பிட்டுள்ளனர். இதன் மூலம் இந்த படத்தில் இருந்து சாய் பல்லவியின் போஸ்டர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.