Homeசெய்திகள்சினிமாசுதந்திர தினத்தன்று 'அமரன்' பட ஸ்பெஷல் போஸ்டர் வெளியீடு!

சுதந்திர தினத்தன்று ‘அமரன்’ பட ஸ்பெஷல் போஸ்டர் வெளியீடு!

-

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் அமரன். இந்த படத்தை ரங்கூன் பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருக்கிறார்.சுதந்திர தினத்தன்று 'அமரன்' பட ஸ்பெஷல் போஸ்டர் வெளியீடு! கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருக்கிறது. ஜிவி பிரகாஷ் எதற்கு இசையமைத்துள்ளார். CH சாய் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்திருக்கிறார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து சாய்பல்லவி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மறைந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்த இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. சிவகார்த்திகேயனின் கேரியரில் இந்த படம் மிகவும் முக்கியமான படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் சிவகார்த்திகேயன் ராணுவ அதிகாரியாக நடித்திருக்கிறார். ஏற்கனவே படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் டீசரும் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. அதைத்தொடர்ந்து இப்படமானது வருகின்ற அக்டோபர் 31 தீபாவளி தினத்தன்று வெளியாக போவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான முழு ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன. சுதந்திர தினத்தன்று 'அமரன்' பட ஸ்பெஷல் போஸ்டர் வெளியீடு!இந்நிலையில் நேற்று (ஆகஸ்ட் 14) சுதந்திர தினத்தை ஒட்டி அமரன் திரைப்படத்தின் மேக்கிங் வீடியோவை பட குழுவினர் வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தனர். அதைத் தொடர்ந்து தற்போது சுதந்திர தினத்திற்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் படத்தில் இருந்து புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

MUST READ