நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருபவர். இவருடைய படங்கள் பெரும்பாலும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்கும் வண்ணம் இருக்கும். அந்த வகையில் சின்னத்திரையில் தனது திரை பயணத்தை தொடங்கி வெள்ளி திரையில் கலக்கி வரும் சிவகார்த்திகேயனுக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக அயலான் திரைப்படம் வெளியாகி பல குடும்பங்களால் கொண்டாடப்பட்டது. அதை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தனது 21 வது படமான அமரன் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்க கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. இதற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைக்கிறார். ராணுவத்தின் பின்னணியில் மறைந்த ராணுவ வீரர் மிகுந்து வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாகி வரும் இந்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் இதில் ராணுவ வீரராக நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக சாய்பல்லவி நடிக்கிறார். மேலும் பல நடிகர்கள் நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு காஷ்மீர் போன்ற பகுதியில் படமாக்கப்பட்டது. சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்தது. இதனை படக்குழுவினரும் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
“DAY IS DONE”… the final frame and its time for the gun salute … #Ulaganayagan #KamalHaasan #Sivakarthikeyan #AMARAN pic.twitter.com/M3fgEaX6Vf
— Raaj Kamal Films International (@RKFI) May 25, 2024
இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் அமரன் படக்குழுவினருக்கு படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்ததற்காக ட்ரீட் கொடுத்திருக்கிறார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.