Homeசெய்திகள்சினிமாபாடல் காட்சிகளுடன் நிறைவடைந்த 'அமரன்' படப்பிடிப்பு!

பாடல் காட்சிகளுடன் நிறைவடைந்த ‘அமரன்’ படப்பிடிப்பு!

-

நடிகர் சிவகார்த்திகேயன், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அமரன் திரைப்படத்தில் நடித்துள்ளார். பாடல் காட்சிகளுடன் நிறைவடைந்த 'அமரன்' படப்பிடிப்பு!

இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடிக்கிறார். இந்த படத்தை கமல்ஹாசன் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இந்த படம் ராணுவத்தின் பின்னணியில் உருவாக்கி வருகிறது. அதன்படி மறைந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாகி வரும் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் முகுந்த் V என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு காஷ்மீர் போன்ற பகுதிகளில் பரபரப்பாக நடைபெற்று வந்தது. அதன் பிறகு நடிகர் சிவகார்த்திகேயன், ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிப்பதற்கு கமிட்டாகி நடித்து வந்தார். ஏ ஆர் முருகதாஸ் போட்ட கண்டிஷனின் படி சிவகார்த்திகேயன் தனது லுக் மாறிவிடக்கூடாது என்பதற்காக SK23 படத்தில் கவனம் செலுத்தி வந்தார். பாடல் காட்சிகளுடன் நிறைவடைந்த 'அமரன்' படப்பிடிப்பு!அதன் பின்னர் அமரன் திரைப்படத்தை முடித்து விரைவில் வெளியிட பட குழுவினர் திட்டமிட்டிருந்த நிலையில் சிவகார்த்திகேயன் மாறி மாறி அமரன் திரைப்படத்திலும் SK23 படத்திலும் நடித்து வந்தார். தற்போது கிடைத்த தகவலின் படி மூன்று நாள் பாடல் காட்சிகளுடன் அமரன் படத்தில் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்ததாக சொல்லப்படுகிறது. எனவே படக்குழுவினர் படத்தை விரைவில் ரிலீஸ் செய்ய முடிவு செய்து அதற்கான வேலைகளை செய்து வருகின்றன. அந்த வகையில் அமரன் படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

MUST READ