Homeசெய்திகள்சினிமாதிட்டமிட்ட பட்ஜெட்டை தாண்டி போகும் 'அமரன்'...... ஒத்திவைக்கப்படுமா ரிலீஸ்?

திட்டமிட்ட பட்ஜெட்டை தாண்டி போகும் ‘அமரன்’…… ஒத்திவைக்கப்படுமா ரிலீஸ்?

-

- Advertisement -

நடிகர் சிவகார்த்திகேயன், தற்போது தனது 21வது படமான அமரன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். திட்டமிட்ட பட்ஜெட்டை தாண்டி போகும் 'அமரன்'...... ஒத்திவைக்கப்படுமா ரிலீஸ்?இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடிக்கிறார். மேலும் இதில் வில்லனாக ராகுல் போஸ் நடிக்கிறார். ராணுவம் சம்பந்தமான கதைக்களத்தில் உருவாகி வரும் இந்த படத்தை ரங்கூன் பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கி வருகிறார். ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பிலும் ஜி.வி. பிரகாஷின் இசையிலும் இந்த படம் தயாராகி வருகிறது. திட்டமிட்ட பட்ஜெட்டை தாண்டி போகும் 'அமரன்'...... ஒத்திவைக்கப்படுமா ரிலீஸ்?இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ராணுவ அதிகாரியாக, அதாவது மறைந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனாக நடிக்கிறார். படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. இந்நிலையில் இதன் கூடுதல் தகவல் என்னவென்றால், இந்த படம் திட்டமிட்ட பட்ஜெட்டை விட 25 கோடி ரூபாய் அதிகமாகி விட்டதாகவும், அதேசமயம் இன்னும் 30 நாட்கள் படப்பிடிப்பு மீதம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே பட குழுவினர் அமரன் திரைப்படத்தை மே அல்லது ஜூலை மாதத்தில் வெளியிட திட்டமிட்டு வருகின்றனர். திட்டமிட்ட பட்ஜெட்டை தாண்டி போகும் 'அமரன்'...... ஒத்திவைக்கப்படுமா ரிலீஸ்?ஆனால் படப்பிடிக்கும் முழுவதும் நிறைவடையாத காரணத்தால் இந்தப் படம் சுதந்திர தினத்தை முன்னிட்டு 2024 ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாக வாய்ப்பு இருப்பதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனினும் இது சம்பந்தமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் நடிகர் சிவகார்த்திகேயன், ஏ ஆர் முருகதாஸ் இயக்கி வரும் SK23 திரைப்படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ