பிரபல இயக்குனரான அமீர் மௌனம் பேசியதே பருத்திவீரன், ராம், போன்ற வெற்றி படங்களை இயக்கி இருக்கிறார். அதே சமயம் சமீப காலமாக நடிப்பிலும் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் சேரன் நடிப்பில் வெளியான யுத்தம் செய் திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் ஒன்றுக்கு நடனமாடி அசத்தி இருந்தார். இதற்கிடையில் கடந்த 2009 இல் வெளியான யோகி திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து பெயர் பெற்றார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அந்த வகையில் தற்போது பல படங்களில் கதாநாயகனாக அமீர் நடித்துக் கொண்டிருக்கிறார். மேலும் ஏற்கனவே வெற்றிமாறன் இயக்கத்தில் வடசென்னை படத்தில் நடித்திருந்த அமீர் தற்போது மீண்டும் வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் திரைப்படத்திலும் நடிக்க இருக்கிறார். கடைசியாக அமீர் நடிப்பில் உயிர் தமிழுக்கு எனும் திரைப்படம் வெளியானது. அதைத்தொடர்ந்து அமீர், மாயவலை என்னும் திரைப்படத்திலும் நடித்துள்ளார். இந்த படத்தை ரமேஷ் கிருஷ்ணன் இயக்க, யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். இந்த படத்தில் அமீருடன் இணைந்து ஆர்யாவின் தம்பி சத்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இப்படத்தினை வெற்றிமாறனும் அமையும் இணைந்து தயாரித்துள்ளனர். சில தினங்களுக்கு முன்பாக மாயவலை படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில் , படத்தின் டீசர் கடந்த டிசம்பர் 5ஆம் தேதி வெளியாகும் என்று ஏற்கனவே படக்குழுவினர் அறிவித்திருந்தனர். ஒரு சில காரணங்களால் படக்குழுவினரால் டீசரை வெளியிட முடியாமல் போனது.
எனவே தற்போது புதிய டீசர் ரிலீஸ் தேதி அறிவித்துள்ளனர். அதன்படி மாயவலை படத்தில் டீசர்( டிசம்பர் 9ஆம் தேதி) இன்று காலை 11 மணி அளவில் வெளியாகும் என்றும், இந்த டீசரை வெற்றிமாறன், சேரன், பொன்வண்ணன், கரு பழனியப்பன், சசிகுமார், சமுத்திரகனி, சினேகன் உள்ளிட்டோர் இணைந்து வெளியிட இருக்கின்றனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
- Advertisement -