Homeசெய்திகள்சினிமாஅமீரின் 'உயிர் தமிழுக்கு' பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!

அமீரின் ‘உயிர் தமிழுக்கு’ பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!

-

அமீர் நடிக்கும் உயிர் தமிழுக்கு படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரபல இயக்குனர் அமீர் மௌனம் பேசியதே படத்தின் மூலம் இயக்குனராக திரைத்துறையில் அடி எடுத்து வைத்தவர். அமீரின் 'உயிர் தமிழுக்கு' பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!பின்னர் ராம், பருத்திவீரன் உள்ளிட்ட வெற்றி படங்களை கொடுத்த இவர் ஒரு நடிகராகவும் வலம் வருகிறார். அந்த வகையில் யோகி திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார். பின்னர் வடசென்னை போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். மேலும் சில படங்களில் நடிகராகவும் இயக்குனராகவும் பணியாற்றி வரும் அமீர் உயிர் தமிழுக்கு என்னும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை ஆதம் பாவா எழுதி இயக்கியுள்ளார். இந்த படத்தை மூன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. வித்யாசாகர் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். தேவராஜ் இதற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இதில் அமீருடன் இணைந்து இமான் அண்ணாச்சி, ஸ்ரீதரன், சாந்தினி, சுப்பிரமணிய சிவா, மாரிமுத்து, சரவண சக்தி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அரசியல் சம்பந்தமான கதைக்களத்தில் உருவாகி உள்ள இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. அமீரின் 'உயிர் தமிழுக்கு' பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!இந்த படத்தின் ரிலீஸ் தேதி பலமுறை அறிவிக்கப்பட்ட ஒரு சில காரணங்களால் ரிலீஸ் செய்யப்படாமல் நிலுவையில் இருந்தது. இந்நிலையில் படத்தின் புதிய ரிலீஸ் தேதியை பட குழுவினர் அறிவித்துள்ளனர். அதன்படி இந்த படம் மே 10ஆம் தேதி வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ