Homeசெய்திகள்சினிமாஅமீரின் உயிர் தமிழுக்கு திரைப்படம்... ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு...

அமீரின் உயிர் தமிழுக்கு திரைப்படம்… ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு…

-

பிரபல இயக்குனர் அமீர், உயிர் தமிழுக்கு எனும் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார். இதனை ஆதம் பாவா இயக்கினார். இதில் அமீருடன் இணைந்து சாந்தினி, இமான் அண்ணாச்சி, ஸ்ரீதரன், சுப்பிரமணிய சிவா, மாரிமுத்து, ராஜ்கபூர், சரவண சக்தி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். வி ஹவுஸ் நிறுவனத்தின் சார்பில் சுரேஷ் காமாட்சி இந்த படத்தை தயாரித்துள்ளார். தேவராஜின் ஒளிப்பதிவிலும் வித்தியாசாகரின் இசையிலும் இப்படம் வெளியானது.
 அரசியல் சார்ந்த கதைகளத்தில் இப்படம் உருவானது. இத்திரைப்படத்தின் பின்னணி வேலைகள் முடிவடைந்து படத்தின் ரிலீஸ் தொடர்ந்து தள்ளிப்போன வண்ணம் இருந்தது. ஒரு வழியாக கடந்த மே மாதம் 10-ம் தேதி இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இந்நிலையில், உயிர் தமிழுக்கு திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகி இருக்கிறது. அதன்படி, வரும் ஜூன் 25-ம் தேதி ஆஹா ஓடிடி தளத்தில் படம் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

MUST READ