Homeசெய்திகள்சினிமாஅதிரடியாக அன்னபூரணி படத்தை நீக்கியது நெட்பிளிக்ஸ் தளம்

அதிரடியாக அன்னபூரணி படத்தை நீக்கியது நெட்பிளிக்ஸ் தளம்

-

நயன்தாராவின் அன்னபூரணி திரைப்படத்திற்கு தொடர்ந்து எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, திரைப்படத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் நீக்கியுள்ளது.

தமிழ் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்படுபவர் நடிகை நயன்தாரா. தமிழில் மட்டும் கலக்கிக் கொண்டிருந்த நயன் தற்போது இந்தியிலும் டாப் நடிகையாக வலம் வருகிறார். பாலிவுட்டில் முதல் படத்திலேயே ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்து உச்ச நட்சத்திரமாக வலம் வருகிறார். ஜவான் படத்திற்கு கிடைத்த ஏகபோக வரவேற்பை அடுத்து, இந்தியில் பல வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. சினிமா மட்டுமன்றி குடும்பம், குழந்தைகள், பட தயாரிப்பு என அனைத்திலும் ஆர்வம் செலுத்தி வருகிறார். அண்மையில் டிவைன் புட்ஸ், பெமி9 ஆகிய பல புதிய நிறுவனங்களில் முதலீடு செய்து தொழிலும் ஆர்வம் செலுத்தி வருகிறார் நயன்தார்.

இதனிடையே நயன்தாரா நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் அன்னபூரணி. இத்திரைப்படத்தை அறிமுக இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கி உள்ளார். இப்படத்தை ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் மற்றும் நாட் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்து உள்ளன. இந்த படத்தில் நயன்தாராவுடன் இணைந்து ஜெய் மற்றும் சத்யராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருக்கின்றனர்.இத்திரைப்படம் கடந்த டிசம்பர் மாதம் 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இத்திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றாலும் அதே சமயம் கலவையான விமர்சனங்கைளும் பெற்றது. இத்திரைப்படம் இந்துகளுக்கு எதிரானது என்றும், இந்துக்களின் மத உணர்வை புண்படுத்துவதாகவும் கூறப்படுகிறது. பிராமின் பெண் அசைவத்தை விரும்புவதும், பிரியாணி உணவை நமாஸ் செய்து தயாரிக்கும் காட்சிகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின

இதனால் வட இந்தியாவில் அன்னபூரணி திரைப்படத்தை நீக்கக் கோரியும், அப்படத்தை ஒளிபரப்பு செய்த நெட்பிளிக்ஸ் நிறுவனத்தை தடை செய்யக்கோரியும் எதிர்ப்பு எழுந்தது. கடும் கண்டனங்களை தொடர்ந்து, அன்னபூரணி திரைப்படத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் நீக்கி உள்ளது.

MUST READ