Homeசெய்திகள்சினிமாநடிகை சோபிதாவுடன் நாக சைதன்யா சுற்றுலா... இணையத்தில் வைரலான புகைப்படம்... 

நடிகை சோபிதாவுடன் நாக சைதன்யா சுற்றுலா… இணையத்தில் வைரலான புகைப்படம்… 

-

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் நாகசைதன்யா நடிகை சமந்தாவை திருமணம் செய்து கொண்டார். 4 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த இந்த ஜோடி கடந்த 2021-ம் ஆண்டு தங்கள் திருமண முறிவை அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இருப்பினும் இருவருமே தற்போது சினிமாவில் அடுத்தடுத்து பிசியாக நடித்து வருகின்றனர்.
இதனிடையே, கடந்த சில மாதங்களுக்கு முன்பாக, நாக சைதன்யாவும் பொன்னியின் செல்வன் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்திருந்த சோபிதா துலிபாலாவும் காதலித்து வருவதாக பல செய்திகள் சமூக வலைதளங்களில் பரவி வந்தன. மேலும், நடிகை சமந்தாவும் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும் கூறப்பட்டது. ஆனால், அதற்கு திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்தார் சமந்தா.
இந்நிலையில், நடிகை சோபிதா மற்றும் நாகசைதன்யா இருவரும் சேர்ந்து இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் கசிந்துள்ளது. ரசிகர்களின் சிக்கிய இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. நெட்டிசன்கள் பலரும் இதற்கு என்ன சொல்ல போகிறீர்கள் என கேள்வி எழுப்பி வருகின்றனர். இதற்கு முன்பாக இருவரும் இணைந்து சுற்றுலா சென்றது குறிப்பிடத்தக்கது.

MUST READ