Homeசெய்திகள்கட்டுரைஅமைச்சர்களை குறிவைக்கும் அமித்ஷா! தமிழ்நாட்டில் ஆப்ரேஷன் லோட்டஸ் ஜெயிக்குமா? உமாபதி உடைக்கும் உண்மைகள்!

அமைச்சர்களை குறிவைக்கும் அமித்ஷா! தமிழ்நாட்டில் ஆப்ரேஷன் லோட்டஸ் ஜெயிக்குமா? உமாபதி உடைக்கும் உண்மைகள்!

-

- Advertisement -

திமுகவை உடைக்கும் பாஜகவின் திட்டம் தோல்வி அடைந்துவிட்டதாகவும், அதனால் எதிர்வரும் நாட்களில் அமலாக்கத் துறை சோதனைகள் மூலம் திமுகவினருக்கு அழுத்தம் கொடுக்கும் என்றும் மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.

umapathi

2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு திமுக அமைச்சர்களை குறி வைத்து நடைபெறும் அமலாக்கத்துறை சோதனைகளின் பின்னணி குறித்து மூத்த பத்திரிகையாளர் உமாபதி பிரபல யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் கூறி இருப்பதாவது:- பாஜக பிளான் ஏ என்ன என்றால்? ஒரு மாநிலம் உள்ளது என்றால் அங்கே ஆளுங்கட்சியை விட்டுவிட்டு எதிர் அணியில் உள்ள கட்சிகளை எல்லாம் ஒருங்கிணைப்பது. இதை வைத்து ஆளும் கட்சியை வெல்ல முடியுமா? என பார்ப்பார்கள். இந்த முறை மகாராஷ்டிரா, டெல்லி, தெலுங்கானா போன்ற இடங்களில் நடைபெறவில்லை. அடுத்தக்கட்டமாக எதிர்க்கட்சிகள் வலுவாக உள்ள இடங்களில், ஆளுங்கட்சியின் மீதும், அவர்களின் கூட்டணி கட்சிகள் மீதும் தாக்குதல் நடத்துவார்கள். பிசிசிஐயில் லட்சக்கணக்கான கோடிகள் புழங்குவதால் அதன் தலைவர் பதவிக்கு தனது மகனை கொண்டுபோய் நுழைத்தார் அமித்ஷா. பின்னர் அதனை தலைமை அமைப்பான ஐசிசி-யிலும் நுழைத்தார். தற்போது உலக கிரிக்கெட்டே அவர்களது கைகளில் உள்ளது. லட்சக்கணக்கான கோடிகள் புழங்குகிறது. கணக்கு கேட்பதற்கு யாரும் கிடையாது.

பிசிசிஐயின் நிர்வாகிகள் இந்தியா சிமெண்ட்ஸ் சீனிவாசன் வரை அனைவரையும் மிரட்டி விரட்டியடித்து விட்டு பிசிசிஐ பொதுச்செயலாளர் பதவியை கைப்பற்றி மகனுக்கு கொடுத்து விட்டார். அதுகூட பரவாயில்லை. தனி தனி செயலிகளை தொடங்கி டி-20 கிரிக்கெட்டில் சூதாட்டத்தை புகுத்தி, பல ஆயிரம் கோடிகளை சூறையாடுகிறார்கள். ஒரு மணி நேரத்தில் நூற்றுக்கணக்கான கோடிகள்  சம்பாதிக்கிறார்கள். தமிழ்நாடு அரசு ஆன்லைன் சூதாட்ட செயலிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மற்ற மாநிலங்களில் சம்பந்தப்பட்ட அமைச்சரை சந்தித்து ரூ.100 கோடிகளை கொடுப்பார்கள். இந்த விவகாரத்தை கண்டுகொள்ள வேண்டாம். உச்ச நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு விசாரணையை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்பார்கள். அந்த வழக்கை விசாரணைக்கு எடுப்பதற்குள் ஆயிரக்கணக்கான கோடிகளை சம்பாதித்து விடுவார்கள். இப்படி பட்ட கட்சியை சேர்ந்தவர்கள் ஊழல் பற்றி பேசுகிறார்கள் என்பது கேலிக்கூத்தானது.

தமிழகம் வருகிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா!
Photo: Minister Amit Shah

மாநிலங்களில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பார்கள். ஆளுங்கட்சியின் கூட்டணியில் இருப்பவர்களை மிரட்டியும், பணம் கொடுத்தும் தங்கள் அணிக்கு வர வழைப்பார்கள். ஏனென்றால் தமிழ்நாட்டின் பட்ஜெட் ரூ.4.5 லட்சம் கோடியாகும். இதில் 10 சதவீதம் வைத்தால் ரூ.45 ஆயிரம் கோடி. 5 ஆண்டுகளில் ரூ.2 லட்சம் கோடி அடித்து விடலாம். பணத்தை போட்டு பணத்தை இறக்குவார்கள். நீங்கள் ஒரு கோடி எதிர்பார்த்தால் அவர்கள் ரூ.100 கோடி கொடுத்தால் என்ன செய்வீர்கள்? அதேபோல் கூட்டணி கட்சிகளில் இருப்பவர்களை எல்லாம் உடைத்து விடுவார்கள். அதையும் மீறி வடநாட்டில் கொள்கை, கோட்பாடு என்று யாரும் இருக்க மாட்டார்கள். வடநாட்டில் பாஜகவில் சேர கூடாது என்று கொள்கைகளோ, பெரியார், அண்ணா, கலைஞர் போன்ற தலைவர்களோ கிடையாது. லாலு பிரசாத், முலாயம் சிங் இருந்ததால் அங்கு மட்டும் சமூகநீதி உள்ளது. பாஜகவின் நரித் தந்திரங்களை பற்றி தெரிந்த அரசியல்வாதிகள் எல்லாம் மறைந்து விட்டனர். அதனால் அங்குள்ளவர்களுக்கு  காங்கிரஸ், பாஜக என்கிற வித்தியாசம் எல்லாம் தெரியாது. அதனால் இங்கிருந்து அங்கும், இங்கிருந்தும் அங்கும் மாறிக்கொள்வார்கள்.

வடநாட்டில் உள்ள அதே எண்ணத்துடன் தற்போது பாஜகவினர் தமிழ்நாட்டில் நுழைந்துள்ளனர். இங்குள்ள கைகூலிகளுக்கு பதவிகளை கொடுத்து அவர்களை வைத்து ஆளுங்கட்சிக்கு எதிராக அவதூறுகளை பரப்புவார்கள். ஆளுங்கட்சியில் உள்ளவர்களை உடைத்து காசு கொடுத்து தூக்கும் வேலைகளில் ஈடுபடுவார்கள். அதுவும் தமிழ்நாட்டில் எடுபடவில்லை. திருமாவளவனுக்கு டார்கெட் போட்டு மண்ணில் புரண்டு பார்த்துவிட்டார்கள்.சேற்றில் உருண்டு பார்த்துவிட்டார்கள். எங்களிடம் வர வேண்டாம். திமுக கூட்டணியில் இருந்து வெளியே வாங்க என்றார்கள். ஆதவ் அர்ஜுனா மூலமாக காசு கொடுத்து, விசிக கட்சியை உடைத்து கொண்டுவர முயற்சித்தார்கள். ஆதவ் பெரிய தொகை பேரம் பேசினார். ஆனால் எதுவும் எடுபடவில்லை. பிறகு இடதுசாரிகள், காங்கிரஸ் போக மாட்டார்கள். அப்போது திமுக கூட்டணியை உடைக்க முடியாது.

அமைச்சரவை மாற்றமா?- ஆளுநரைச் சந்திக்கிறார் அமைச்சர் துரைமுருகன்!
File Photo

அடுத்தபடியாக மற்ற மாநிலங்களை போல அமைச்சர்களை பிடித்து உள்ளே போடுகிறார்கள். கடந்த தேர்தலுக்கு பிறகு திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனை கட்சி உடைத்து விட்டு வாருங்கள் என கூப்பிட்டார்கள். நீங்கள் தான் கட்சியின் தலைவர், ஸ்டாலினை நீக்கிவிட்டேன் என்று ஒரு கடிதம் மட்டும் கொடுங்கள். உதயசூரியன் சின்னத்தை முடக்கி விடுகிறேன் என்றார்கள். அவர் அதற்கு சம்மதிக்க மறுத்துவிட்டதால் அமலாக்கத்துறையை வைத்து வழக்குப்பதிவு செய்து மிரட்டு -கிறார்கள். கடைசியில் அவர் பாஜகவுக்கு வர மாட்டேன் என்று சொல்லிவிட்டார். அடுத்தபடியாக எ.வ.வேலுவை டார்கெட் செய்தார்கள். கே.என்.நேரு, பொன்முடி உள்ளிட்ட 10 பேரை டார்கெட் செய்தார்கள். கொங்கு மண்டலத்தில் மிகப் பெரிய தடையாக இருக்கிற செந்தில் பாலாஜியை தூக்கி உள்ளே வைத்தார்கள். அடுத்து பொன்முடி, அனிதா ராதாகிருஷ்ணன் போன்றவர்கள் மீது வழக்குகளை போட்டு நெருக்கடி கொடுக்கிறார்கள். ஒன்று தங்களுடன் வந்து சேர்ந்துகொண்டால் பதவி கொடுக்கிறோம். அல்லது பணத்தை வாங்கிகொண்டு பாஜக நிறுத்தும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக வேலை செய்ய வேண்டும். அப்படி இல்லாவிட்டால் சிறைதான் என்று மிரட்டல் விடுக்கிறார்கள்.

நல்ல வேளையாக இம்முறை மத்தியில் மைனாரிட்டி அரசாக அமைந்துவிட்டது. கடந்த முறை போன்று பாஜக தனிப் பெரும்பான்மையோடு இருந்திருந்தால் மு.க.ஸ்டாலின் இந்நேரம் சிறையில் இருந்திருப்பார். உதயநிதியை தூக்கி எப்போதோ சிறையில் வைத்திருப்பார்கள். ஆனால் இறைவன் செயல். அவர்கள் தனிப் பெரும்பான்மை பெறவில்லை. இருந்தபோதும் தமிழ்நாட்டில் அவர்கள் இதை செய்யாமல் விடமாட்டார்கள். இன்னும் ஒரு வருடத்திற்கு அமைச்சர்கள் மீது வழக்குப் போடுவது. துணை முதலமைச்சர் உதயநிதி மீது விரைவில் அமலாக்கத்துறையை வைத்து வழக்குப் போடுவார்கள். இதற்கான வேலையை விரைவில் தொடங்க உள்ளனர். இந்த வேலையை பார்த்துக்கொள்வதற்கு தான் அண்ணாமலைக்கு தேசிய அளவில் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. ரஜினிகாந்த், துரைமுருகனை விமர்சித்த நிகழ்வு என்பது, பாஜக சொல்லியதன் பேரில்தான். அவர் பாஜகவில் சேர மறுத்ததால் தான் ரஜினி மூலம் அந்த வேலையை செய்தார்கள். இப்படி அடுத்தடுத்து அரசியல் நெருக்கடிகளை இந்த மாத இறுதியில் இருந்து திமுகவுக்கு கொடுக்க தொடங்குவார்கள். இன்னும் நிறைய அரசியல் பரபரப்புகளை பார்க்கலாம், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ