Homeசெய்திகள்சினிமாமாபெரும் சுற்றுலாத்தலமாக மாறும் அயோத்தி... சொத்துகளை வாங்க முனைப்பு காட்டும் நட்சத்திரங்கள்... மாபெரும் சுற்றுலாத்தலமாக மாறும் அயோத்தி… சொத்துகளை வாங்க முனைப்பு காட்டும் நட்சத்திரங்கள்…
பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் அயோத்தியில் புதிய வீட்டுமனை வாங்கி இருக்கிறார்.
உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் அனைவரும் வியக்கும் வகையில் பிரம்மாண்டமாக ராமர் கோயில் கட்டப்பட்டு வருகிறது. அயோத்தி ராமர் – மசூதி பிரச்சனை ஒரு வழியாக முடிவுக்கு வந்த பிறகு அயோத்தியில் ராமர் கோயில் கட்ட முடிவு செய்யப்பட்ட கடந்த 2020-ம் ஆண்டு கோயிலுக்கான அடிக்கல் நாட்டப்பட்டது. நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி கோயிலுக்கான அடிக்கல்லை நாட்டினார். இதைத் தொடர்ந்து சுமார் 4 ஆண்டுகளாக கோயிலின் கட்டட வேலைகள் நடைபெற்று வந்தன. ஒரு வழியாக தற்போது வரும் 22-ம் தேதி அயோத்தி ராமர் கோயிலில் குடமுழுக்கு நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் இந்தியா முழுவதும் உள்ளஅரசியல் மற்றும் திரைத்துறை நட்சத்திரங்கள், தொழில் அதிபர்கள் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டு உள்ளனர்.
அயோத்தியில் கோயில் திறந்தபிறகு அந்த இடம் இந்தியாவில் மாபெரும் சுற்றுலாத்தலமாக உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வௌிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வருவதற்கு ஏற்றாற்போல அங்கு ரயில் நிலையம் மற்றும் விமான நிலையங்களும் திறக்கப்பட்டு சேவைகள்தொடங்கி உள்ளன. இதனால், அங்கு நிலத்தின் விலையும் கிடுகிடுவென அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு சதுர அடி நிலப்பரப்பின் விலையும் அதிகரித்து வருகிறது.
இருப்பினும், இந்தியாவின் பெரும் தொழில் அதிபர்கள், திரை நட்சத்திரங்கள் பலரும் அயோத்தியில் தற்போது வீடு மற்றும் வீட்டுமனை வாங்க முனைப்பு காட்டி வருகின்றனர். அதே சமயம், அயோத்தியில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் புதிய வீட்டுமனை வாங்கி இருக்கிறார். சுமார் 10 ஆயிரம் சதுர அடியில் இந்த வீட்டுமனை 15 கோடி ரூபாய் மதிப்பு உடையது தெரிகிறது.