Homeசெய்திகள்சினிமாபிரபல நடிகரின் மருமகளுடன் காதல் காட்சி... நடுங்கிப்போன ரஜினிகாந்த்...

பிரபல நடிகரின் மருமகளுடன் காதல் காட்சி… நடுங்கிப்போன ரஜினிகாந்த்…

-

- Advertisement -

உலக அழகி பட்டம் வென்ற ஐஸ்வர்யா ராய் இந்திய சினிமாவில்  முன்னணி கதாநாயகி ஆவார். தமிழில் இருவர் படத்தின் மூலம் அறிமுகமானார். மணிரத்னம் இயக்கத்தில் உருவான இப்படத்தில் ஐஸ்வர்யா ராய் நாயகியாக நடித்திருப்பார். இதைத் தொடர்ந்து ஷங்கர் இயக்கிய ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டு கொண்டேன், ராவணன், எந்திரன், ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். அண்மையில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் நந்தினியாக நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் ஐஸ்வர்யா ராய்.

அவர் கடந்த 2007-ம் ஆண்டு பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனின் மகனும், நடிகருமான அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிக்கு கடந்த 2011-ம் ஆண்டு ஆராத்யா என்ற பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த பின்பு, சில ஆண்டுகள் படங்களில் நடிக்காமல் இருந்த ஐஸ்வர்யா ராய், தமிழில் மீண்டும் என்ட்ரி கொடுத்தார். ஷங்கர் இயக்கிய எந்திரன் திரைப்படத்தில் அவர் ரஜினிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

இத்திரைப்படம் கடந்த 2010-ம் ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. இப்படத்தில் ரஜினி மற்றும் ஐஸ்வர்யா ராய்க்கு காதல் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. அந்த காதல் காட்சிகளில் நடிக்க ரஜினிகாந்த் மிகவும் பயந்ததாராம். ஏனெனில், ஐஸ்வர்யா ராயின் மாமனார் அமிதாப் பச்சன் ரஜினியின் நெருங்கிய நண்பர் என்பதால், அவரது மருமகளுடன் நடிக்க தயங்கியதாகவும், பல டேக்குகள் வாங்கியதாகவும் கூறியிருக்கிறார். ரஜினி கூறிய இந்த விஷயத்தை, அவரது நண்பரும், பாலிவுட் நடிகருமான அமிதாப் பச்சன் நினைவு கூறியிருக்கிறார். இது வைரலாகி வருகிறது.

MUST READ