நடிகை அம்மு அபிராமி நடிக்கும் ஜமா படத்தின் டீசர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அம்மு அபிராமி தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளின் ஒருவர். இவர் கடந்த 2017 இல் விஜய், கீர்த்தி சுரேஷ் ஆகியோரின் நடிப்பில் வெளியான பைரவா திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். அதைத்தொடர்ந்து இவர் விஷ்ணு விஷாலின் ராட்சசன், தனுஷின் அசுரன் போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். கடைசியாக கண்ணகி, ஹாட்ஸ்பாட் போன்ற படங்களில் நடித்துள்ளார் அம்மு அபிராமி. இந்நிலையில் இவர் அடுத்ததாக ஜமா எனும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் அம்மு அபிராமி உடன் இணைந்து சேத்தன், ஸ்ரீ கிருஷ்ண தயாள்,கே வி என் மணிமேகலை உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த படத்தை பாரி இளவழகன் இயக்க இசைஞானி இளையராஜா படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இதனை கூழாங்கல் படத்தின் தயாரிப்பு நிறுவனம் லர்ன் அண்ட் டீச் புரொடக்ஷன் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் கடந்த சில தினங்களுக்கு முன்பாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
#Jama Teaser Releases Tomorrow at 4PM, Stay Tuned to be amazed✨
Produced by- @LearnNteachProd
( Koozhangal Visionaries)
Isaignani @ilaiyaraaja Musical
Released by esteemed distributors @PictureBoxCo1 #Alexander@PariElavazaghan@Ammu_Abhirami @Chetan_k_a @HariPrasad4091 pic.twitter.com/tkVgkqAJ3X— LEARN AND TEACH PRODUCTION (@LearnNteachProd) July 13, 2024
மேலும் அதைத் தொடர்ந்து இந்த படமானது வருகின்ற ஆகஸ்ட் 2ஆம் தேதி வெளியாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இதன் டீசர் நாளை
(ஜூலை 14) மாலை 4 மணி அளவில் வெளியாகும் என்று புதிய போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.