நடிகை எமி ஜாக்சன் ஆரம்பத்தில் மாடல் அழகியாக வலம் வந்தவர். அதை தொடர்ந்து இவர் மதராசபட்டினம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த படம் இவருக்கு நல்ல பெயரையும் புகழையும் பெற்று தந்தது. மேலும் தாண்டவம், கெத்து, ஐ உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். அந்த வகையில் இவர் தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிப் படங்களில் நடித்து வருகிறார். மேலும் இவர் கடைசியாக ஏ எல் விஜய் இயக்கத்திலும் அருண் விஜயின் நடிப்பிலும் வெளியாகி இருந்த மிஷன் சாப்டர் 1 திரைப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். இதற்கிடையில் இவர் கடந்த 2015ல் ஜார்ஜ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்கள் இருவருக்கும் ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. இருப்பினும் சில வருடங்களிலேயே இவர்களின் திருமண உறவு முடிவுக்கு வந்தது. அதன் பின்னர் எட் வெஸ்ட்விக் என்பவரை காதலித்த எமி ஜாக்சன் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அவரை திருமணம் செய்து கொண்டார். அவர்களின் திருமணம் நெருங்கிய நண்பர்கள், உறவினர்களுக்கு மத்தியில் எளிமையான முறையில் நடைபெற்றது. இந்நிலையில் எமி ஜாக்சன் இரண்டாவது முறையாக கர்ப்பமாகியுள்ளார். இது தொடர்பாக தனது கணவர் எட் வெஸ்ட்விக் – உடன் ரொமான்டிக்காக எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த தகவல் இருந்த ரசிகர்கள் எமி- ஜாக்சனுக்கு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் திருமணம் முடிந்து மூன்று மாதங்களில் 5 மாத கர்ப்பிணியாக இருக்கும் எமி ஜாக்சன், திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாகிவிட்டரோ என்று ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களை விவாதித்து வருகின்றனர்.