Homeசெய்திகள்சினிமா'ஹாட் ஸ்பாட்' பட இயக்குனரின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு!

‘ஹாட் ஸ்பாட்’ பட இயக்குனரின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு!

-

- Advertisement -

ஹாட் ஸ்பாட் பட இயக்குனரின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.'ஹாட் ஸ்பாட்' பட இயக்குனரின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு!கடந்த மே 3ஆம் தேதி விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் ஹாட் ஸ்பாட்.  கே ஜே பி டாக்கீஸ் மற்றும் 7 வாரியர் பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருந்தது. அதாவது திரைப்பட வாய்ப்பு தேடி வரும் இயக்குனர் ஒருவர் தயாரிப்பாளரிடம் நான்கு வித்தியாசமான கதைகளை சொல்வது போன்று படமானது உருவாக்கப்பட்டிருந்தது. 'ஹாட் ஸ்பாட்' பட இயக்குனரின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு!அதில் இடம்பெற்ற நான்கு கதைகளுமே அரசியல் சமூகம் – சார்ந்த சிக்கல்கள் சொல்லப்பட்டிருந்தன. இந்த படத்தில் கலையரசன், அம்மு அபிராமி, கௌரி கிஷன், சாண்டி மாஸ்டர், ஜனனி ஐயர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். படத்தில் கதை சொல்லவரும் இயக்குனராக படத்தின் இயக்குனர் விக்னேஷ் கார்த்திக்கே நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படமானது ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்று பல்வேறு தரப்பினர் இடையே பாராட்டுகளையும் பெற்றது. 'ஹாட் ஸ்பாட்' பட இயக்குனரின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு!அனைவருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நல்ல ஒரு கதையம்சம் கொண்ட இந்த படத்தை தொடர்ந்து விக்னேஷ் கார்த்திக் என்ன படம் இயக்கப் போகிறார் என்று எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்தது. அதன்படி விக்னேஷ் கார்த்திக்கின் அடுத்த படம் குறித்த முக்கிய அறிவிப்பு நாளை (ஆகஸ்ட் 9) மாலை 7 மணி அளவில் வெளியாகும் என்று ஹாட் ஸ்பாட் படத்தின் தயாரிப்பு நிறுவனம் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.

MUST READ