நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமண வீடியோ நெட்பிளிக்ஸ் தளத்தில் கடந்த ஆண்டு நவம்பர் 18ஆம் தேதி நயன்தாரா பியாண்ட் தி சேரி டேல் என்ற தலைப்பில் ஆவணப்படமாக வெளியிடப்பட்டது. அதற்கு முன்பாக நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் காதலுக்கு அடித்தளமாக இருந்த நானும் ரெளடி தான் படத்தின் படப்பிடிப்பு காட்சிகளை தங்களின் ஆவணப்படத்தில் பயன்படுத்த அப்படத்தின் தயாரிப்பாளர் தனுஷிடம் அனுமதி கேட்டுள்ளனர்.
ஆனால் தனுஷ் அனுமதி தராததால் நடிகை நயன்தாரா தனுஷ் மீது பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அதன் பின்னர் தனுஷின் அனுமதி இல்லாமல் திருமண ஆவணப் படத்தில் நானும் ரெளடி தான் படப்பிடிப்பு காட்சிகள் பயன்படுத்தப்பட்டிருந்ததால் நடிகர் தனுஷ், நயன்தாரா மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மேலும் நயன்தாரா, ரூ. 10 கோடி நஷ்ட ஈடு தரவேண்டும் எனவும் நோட்டீஸ் அனுப்பி இருந்தார்.
அதைத் தொடர்ந்து அனுமதி இல்லாமல் சந்திரமுகி படக் காட்சிகளை ஆவணப்படத்தில் பயன்படுத்தியதாக சொல்லி நயன்தாராவிற்கு, சந்திரமுகி படக்குழுவினர் ரூ. 5 கோடி கேட்டு நோட்டீஸ் அனுப்பியதாக சமீபத்தில் செய்திகள் வெளியானது. இது குறித்து சந்திரமுகி படத்தின் தயாரிப்பு நிறுவனமான சிவாஜி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது. அத்துடன் திருமண ஆவணப்படத்தில் சந்திரமுகி பட காட்சிகளை பயன்படுத்த அனுமதி அளித்து என்ஓசி கொடுத்திருப்பதாகவும் விளக்கம் அளித்துள்ளது.
- Advertisement -