Homeசெய்திகள்சினிமா'மதுர வீரன் தானே' ..... பாக்ஸ் ஆபிஸில் அசால்ட் பண்ணும் 'வீர தீர சூரன்'!

‘மதுர வீரன் தானே’ ….. பாக்ஸ் ஆபிஸில் அசால்ட் பண்ணும் ‘வீர தீர சூரன்’!

-

- Advertisement -

தமிழ் சினிமாவில் பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, சித்தா ஆகிய வெற்றி படங்களை கொடுத்து ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர் அருண்குமார்.மதுர வீரன் தானே ..... பாக்ஸ் ஆபிஸில் அசால்ட் பண்ணும் 'வீர தீர சூரன்'! இவரது இயக்கத்தில் கடந்த மார்ச் 27ஆம் தேதி திரைக்கு வந்த படம் தான் வீர தீர சூரன். அதிலும் பொதுவாக முதல் பாகம் வெளியான பின்னர்தான் இரண்டாம் பாகம் வெளியாகும். ஆனால் அருண்குமார் புதிய முயற்சியை கையில் எடுத்து முதலில் இரண்டாம் பாகத்தை வெளியிட்டுள்ளார். அந்த வகையில் வீர தீர சூரன் பாகம் 2 என்ற தலைப்பில் விக்ரம் நடிப்பில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து பாசிட்டிவ்வான விமர்சனங்களை பெற்று வெற்றி பாதையில் நகர்ந்து கொண்டிருக்கிறது. ஆக்சன் திரில்லர் ஜானரில் வெளியான இந்த படத்தில் விக்ரமுடன் இணைந்து எஸ்.ஜே. சூர்யா, சுராஜ், துஷாரா ஆகியோரும் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ஸ்கோர் செய்துள்ளனர். அடுத்தது ஜி.வி. பிரகாஷின் இசையும் இந்த படத்திற்கு பெரிய பலம் கொடுத்துள்ளது. மேலும் விக்ரமின் தூள் படத்தில் இடம் பெற்ற ‘மதுர வீரன் தானே’ பாடலை இந்த படத்திலும் வைத்திருந்தது ரசிகர்களுக்கு கூஸ்பம்ஸ் கொடுத்தது. மதுர வீரன் தானே ..... பாக்ஸ் ஆபிஸில் அசால்ட் பண்ணும் 'வீர தீர சூரன்'!இவ்வாறு பல்வேறு தரப்பினர் இடையே பாராட்டுகளை பெற்று வரும் வீர தீர சூரன் திரைப்படம் தற்போது வரையிலும் உலக அளவில் ரூ. 52 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. எனவே படம் ஓடிடியில் வெளியாவதற்கு முன்பாக ரூ. 100 கோடியை கடந்து விடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ