கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியானது தொடர்ந்து 6 சீசன்களிலும் வெற்றி பெற்று அடுத்தடுத்து முன்னேறி தற்போது ஏழாவது சீசன் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. சண்டை, வாக்குவாதம் என ஒரு ரியாலிட்டி ஷோவாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சிக்கு பல ரசிகர்கள் இருக்கிறார்கள். விஜய் டிவியின் டிஆர்பியை எகிற செய்யும் நிகழ்ச்சி இதுதான். சீரியலை விட இந்த பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பலரும் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். மேலும் இந்த 7வது சீசனில் விசித்ரா, மாயா, VJ அர்ச்சனா, பிரதீப் ஆண்டனி, ஜோவிகா, பிராவோ, அக்ஷயா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தற்போது 55 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்களுக்கு பூகம்பம் டாஸ்க் கொடுக்கப்பட்டது. ஆனால் அதில் அவர்கள் வெற்றி பெறவில்லை என்றால் ஏற்கனவே எலிமினேட் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்ட மூன்று பேர் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் வைல்ட் கார்டு எண்ட்ரி மூலமாக உள்ளே வருவார்கள் என்று அறிவிக்கப்பட்டது. தற்போது அந்த டாஸ்க் வீட்டில் உள்ளவர்கள் தோற்றதால் பிராவோ மற்றும் அக்ஷயா வெளியேற்றப்பட்டு விஜய் வர்மா மற்றும் அனன்யா ஆகியோர் ரீ எண்ட்ரி கொடுத்திருக்கிறார்கள். இந்நிலையில் பிக் பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்த அனன்யா, விசித்ராவிற்கு நரி , பூர்ணிமாவிற்கு தவளை, நிக்சனுக்கு கிரிஞ்ச், கூல் சுரேஷுக்கு கொசு என ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பட்டத்தை கொடுத்த அனன்யா மாயாவிற்கு விஷ பாட்டில் பட்டதை கொடுத்து இருக்கிறார். மேலும் சிலருக்கு சொம்பு, தேள் போன்ற பட்டங்களையும் கொடுத்திருக்கிறார். தற்போது பிக் பாஸ் வீட்டிற்குள் அனன்யாவும், விஜய் வர்மாவும் நுழைந்துள்ளதால் அடுத்தது என்ன நடக்கும் என்ற பரபரப்பு உண்டாகி இருக்கிறது.