கார்த்தி நடிப்பில் உருவாகி இருந்த மெய்யழகன் திரைப்படம் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி திரைக்கு கொண்டுவரப்பட்டது. இந்த படத்தில் கார்த்தி உடன் இணைந்து அரவிந்த்சாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் ஸ்ரீதிவ்யா, தேவதர்ஷினி, ராஜ்கிரண், இளவரசு ஆகியோரும் நடித்திருந்தனர். இந்த படத்தினை ஜோதிகா மற்றும் சூர்யாவின் 2D என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்க பிரேம்குமார் இந்த படத்தை இயக்கியிருந்தார். இந்த படத்தில் கார்த்தி மற்றும் அரவிந்த்சாமி ஆகிய இருவருக்குமான பாசப்பிணைப்பு மிக அழகான திரைக்கதையின் மூலம் காட்டப்பட்டிருந்தது. இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று பல்வேறு தரப்பினர் இடையே பாராட்டுகளையும் பெற்று வருகிறது. அந்த வகையில் கடந்த அக்டோபர் 25ஆம் நெட்பிளிக்ஸ் ஓடிடித்தளத்தில் வெளியான மெய்யழகன் திரைப்படத்தை அன்புமணி ராமதாஸ் பாராட்டியுள்ளார்.
ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள மெய்யழகன் திரைப்படத்தை தீபஒளி நாளில் கண்டு மகிழ்ந்தேன். முன்னோர் வழி, வம்சாவளி, கிராமத்து கல்யாண விருந்து, காளை, பாம்பு, பல்லியுடன் இணைந்த வாழ்க்கை, குடும்பத்தில் 4 பேர் மட்டுமே இருந்தாலும் கூட, பெரிய தாத்தா, சின்ன தாத்தா, அவர்களின் வகையறா என…
— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) November 3, 2024
இது தொடர்பாக தனது சமூக வலைதள பக்கத்தில், “ஓடிடியில் வெளியான மேலகன் திரைப்படத்தை தீப ஒளி நாளில் கண்டு மகிழ்ந்தேன். முன்னோர் வழி, வம்சாவழி, கிராமத்து கல்யாண விருந்து, பாம்பு, பல்லி, காளையுடன் இணைந்த வாழ்க்கை, குடும்பத்தில் நான்கு பேர் மட்டுமே இருந்தாலும் கூட பெரிய தாத்தா, சின்ன தாத்தா, அவர்களின் வகையறா என உறவு முறைகளை இன்றைய இளம் தலைமுறைக்கு எடுத்துக் கூறும் சிறந்த படம்தான் மெய்யழகன். என்னுடைய சிறு வயது கிராமத்து நினைவுகளை மீண்டும் முழுமையாக எனக்குள் கொண்டு வந்த படம் இது. நடிகர்கள் கார்த்தி, அரவிந்த்சாமி ஆகிய இருவருமே அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். இயக்குனர் பிரேம்குமார் பார்வையாளர்களை உறவு கூட்டுக்குள் அழைத்துச் சென்றுள்ளார். இந்த பீல் குட் படம் மிகவும் நன்றாக இருந்தது” என்று தான் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளார்.