Homeசெய்திகள்சினிமாஅறம் பட இயக்குனரின் அடுத்த படத்தில் ஆண்ட்ரியா....என்ன டைட்டில் தெரியுமா?

அறம் பட இயக்குனரின் அடுத்த படத்தில் ஆண்ட்ரியா….என்ன டைட்டில் தெரியுமா?

-

கடந்த 2017 ஆம் ஆண்டு நயன்தாரா நடிப்பில் வெளியான திரைப்படம் அறம்.அறம் பட இயக்குனரின் அடுத்த படத்தில் ஆண்ட்ரியா....என்ன டைட்டில் தெரியுமா? ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்டெடுக்கும் கதைக்களத்தில் கிராமத்து பின்னணியில் உருவாகியிருந்த இந்த படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வெற்றி படமாக அமைந்தது. இந்த படத்தில் நயன்தாரா கலெக்டராக நடித்திருந்தார். படத்தில் நடித்த துணை நடிகர்கள் அத்தனை பேரும் தங்களின் நடிப்பை எதார்த்தமாக வெளிப்படுத்தி இருந்தனர். படத்தில் நடித்திருந்த சிறுவர்களும் தங்களின் கதாபாத்திரத்தில் அருமையாக நடித்திருந்தனர். இந்த படத்தை இயக்குனர் கோபி நயினார் இயக்கியிருந்தார். இவர் அடுத்ததாக ஆண்ட்ரியா நடிப்பில் மபுதிய படம் ஒன்றை இயக்குகிறார். அறம் பட இயக்குனரின் அடுத்த படத்தில் ஆண்ட்ரியா....என்ன டைட்டில் தெரியுமா?இந்த படத்திற்கு மனுஷி என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதனை புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு படக்குழுவினர் அறிவித்துள்ளனர். மேலும் இப்படத்தை பிரபல இயக்குனர் வெற்றிமாறன் தயாரித்து வருகிறார். படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார்.  அதேசமயம் இப்படம் விரைவில் வெளியாக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆகவே கோபி நயினார் அறம் படத்தைப் போல சிறந்த கன்டென்ட்டை இந்த படத்தில் வைத்திருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் சினிமாவின் பாடகியாகவும் நடிகையாகவும் வலம் வரும் ஆண்ட்ரியா கா போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ