Homeசெய்திகள்சினிமாஆண்ட்ரியா காரை துரத்திய ரசிகர்கள்... இசை நிகழ்ச்சியில் சம்பவம்...

ஆண்ட்ரியா காரை துரத்திய ரசிகர்கள்… இசை நிகழ்ச்சியில் சம்பவம்…

-

- Advertisement -
kadalkanni
இசை நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆண்ட்ரியாவையும், அவரது காரையும் துரத்திச் சென்ற ரசிகர்களால் பரபரப்பு ஏற்பட்டது
கதாநாயகி, வில்லி, பாடகி என பன்முகங்களை கொண்டவர் ஆண்ட்ரியா. கண்ட நாள் முதல் என்ற படத்தில் ஒரு சிறிய ரோல் நடித்து ஆண்ட்ரியா திரைத்துறையில் அறிமுகமானார். தொடர்ந்து பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் நாயகியாக அவரின் சினிமா பயணம் தொடங்கியது. நடிகை மட்டுமன்றி சிறந்த பாடகியாகவும் வலம் வருபவர் ஆண்ட்ரியா.நடிப்பைத் தாண்டி ஆண்ட்ரியா ஒரு நல்ல மாடலும் கூட. அண்மையில் விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் ஆண்ட்ரியா நடித்திருப்பார். இதையடுத்து மிஷ்கின் இயக்கியிருக்கும் பிசாசு இரண்டாம் பாகத்தில் அவர் நடித்திருக்கிறார்.

இந்நிலையில், புதுச்சேரி அரசு சார்பில் ஆண்டுதோறும் காரைக்காலில் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இந்த ஆண்டிற்கான நிகழ்ச்சி தற்போது நடைபெற்று முடிந்துள்ளது. 4 நாட்கள் நடைபெற்ற நிகழ்ச்சியில் பலரும் கலந்து கொண்டனர். நிறைவு நாள் நிகழ்ச்சியில் நடிகையும், பாடகியுமான ஆண்ட்ரியாவின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக முதலமைச்சர் ரங்கசாமி கலந்து கொண்டார். அவர் நடிகை ஆண்ட்ரியாவுக்கு சால்வை அணிவித்து பாராட்டினார்.

இசை நிகழ்ச்சியில் அவர் ஊம் சொல்றியா மாமா என்ற பாடலை பாடி அசத்தினார். இசை நிகழ்ச்சி முடிந்து ஆண்ட்ரியா புறப்படும்போது அவர் ரசிகர்கள் வெள்ளத்தில் சிக்கிக்கொண்டார், நகர முடியாமல் தவித்த அவரை போலீசார் பத்திரமாக மீட்டு காரில் அனுப்பினார். இருப்பினும் ஆண்ட்ரியா சென்ற காரையும் ரசிகர்கள் துரத்திச் சென்றதால் இசை நிகழ்ச்சியில் பரபரப்பு ஏற்பட்டது.

MUST READ