ரன்பீர் கபூர் நடிப்பில் அனிமல் திரைப்படம் உருவாகியுள்ளது. இதில் ரன்பீர் கபூருடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, அனில் கபூர், பாபி தியோல் மற்றும் பலர் நடித்துள்ளனர். இதனை அர்ஜுன் ரெட்டி படத்தை இயக்கிய சந்திப் ரெட்டி வங்கா இயக்கியுள்ளார். பத்ரகாளி பிக்சர்ஸ் நிறுவனம் அனிமல் திரைப்படத்தை தயாரித்துள்ளது. இப்படம் வருகின்ற டிசம்பர் 1ஆம் தேதி தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியாக இருக்கிறது.
படத்தின் கிளிம்ஸ் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் ரன்பீர் கபூரின் பிறந்த நாளை முன்னிட்டு இதன் டீசர் வெளியானது. நாயகி ரஷ்மிகா மந்தனா நாயகன் ரன்பீர் கபூருடன் பேசுவது போன்ற காட்சியுடன் டீசர் அதிரடியாக இருந்தது. இத்திரைப்படத்தின் ட்ரைலர் இன்று வெளியாகிறது.
இந்நிலையில், அனிமல் படத்திற்கு தணிக்கைக் குழு ஏ சான்றிதழ் வழங்கி உள்ளது. இத்திரைப்படத்தின் டன் டைம் 3 மணி நேரம் 15 நிமிடம் என ஏற்கனவே தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.