அர்ஜுன் ரெட்டி பட இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடிப்பில் பான் இந்தியா படமாக வெளியாகி வசூலை வாரி குவித்து வருகிறது”அனிமல்” திரைப்படம். இதுவரை பார்த்திராத ராவானா குணாதிசயங்களைக் கொண்ட கதாநாயகன், தன் தந்தை மீது கொண்ட பாசத்தால் சைக்கோ தனமாக செய்யும் விஷயங்கள், மிகவும் வெளிப்படையான அடல்ட் வசனங்கள், ஹாலிவுட்டை மிஞ்சும் அளவுக்கு அடல்ட் காட்சிகள், அட்டகாசமான சண்டை காட்சிகள், மிரட்டலான பின்னணி இசை என கலந்து காட்டி இருந்தனர் படக் குழுவினர். தென்னிந்திய படங்களின் சாயல்களில் தற்போது பாலிவுட் படங்கள் வரத் தொடங்கி விட்டன. அந்த வரிசையில் வெளியான அனிமல் திரைப்படமும் வட இந்தியாவில் ரசிகர்களை பெருமளவு கவர்ந்துள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய பகுதிகளில் இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று இருந்தாலும், இந்தியா முழுவதுமாக 500 கோடி வசூலைத் தாண்டி வேற லெவல் சம்பவத்தை பாக்ஸ் ஆபிஸில் செய்துள்ளது.
வெளியான முதல் வாரத்திலேயே 527.6 கோடியை வசூலித்துள்ளது இப்படம். இந்தியாவில் மட்டும் 312.96 கோடியை வசூலித்துள்ளது. இதன் மூலம் 500 கோடி கிளப்பில் இணைந்து சாதனை படைத்துள்ளது “அனிமல்”. அடுத்தடுத்து வார இறுதி நாட்கள் வர உள்ளதால் இப்படத்திற்கு வசூல் இன்னும் அதிகரித்துக் கொண்டே செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இப்படம் ஆயிரம் கோடியை வசூல் செய்யுமா என்பதை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
- Advertisement -