ரன்பீர் கபூர் நடிப்பில் அனிமல் திரைப்படம் உருவாகியுள்ளது. இதில் ரன்பீர் கபூருடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, அனில் கபூர், பாபி தியோல் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதனை அர்ஜுன் ரெட்டி படத்தை இயக்கிய சந்திப் ரெட்டி வங்கா இயக்கி இருக்கிறார். பத்ரகாளி பிக்சர்ஸ் நிறுவனம் அனிமல் திரைப்படத்தை தயாரித்துள்ளது. இப்படம் வருகின்ற டிசம்பர் 1ஆம் தேதி தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியாக இருக்கிறது.
படத்தின் கிளிம்ஸ் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் ரன்பீர் கபூரின் பிறந்த நாளை முன்னிட்டு படத்தின் டீசர் வெளியானது. படத்திற்கு ஏகமும் வன்முறை காட்சிகள் நிறைந்து ஒரு முழுமையான ஆக்சன் படமாக இப்படம் உருவாகியுள்ளது. மேலும் படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. ஆக்சன் காட்சிகள் கலந்து எமோஷனல் காட்சிகளும் மிகுந்த ஒரு பக்காவான மசாலா படமாக அனிமல் உருவாகி உள்ளது.
படத்திற்கான புரமோசன் பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது. மும்பை, சென்னை, ஐதராபாத் என மாறி மாறி படத்தின் புரமோசன் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகர் ரன்பீர் கபூர், அனிமல் திரைப்படம், இயக்குநர் சந்தீப் ரெட்டி வாங்காவின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்டது என்றும், இது அவருடைய பயோபிக் என்றும் கூறியிருக்கிறார். இதனால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.